Tuesday, November 27, 2012

அண்ட்ராயர் - 2

key words: android, ICS, beginners, elders, howto android phone.
----------------------------------------------------------------------------------------
மன்னிக்கணும். இந்த பதிவு போட நாளாயிடுச்சு. நடுவில ஊருக்குப்போய் என் பேத்தி பேரனை பாத்து வந்தேன் நாலு நாள் அதுல ஓடிடுச்சு. பயண நேரத்தில அண்ட்ராயரை இன்னும் டெஸ்ட் பண்ண முடிஞ்சது. அந்த கதை எல்லாம் அப்புறமா சொல்லறேன்.

அண்ட்ராயர் முகப்ப பார்க்கலாம். முன்னேயே அதை இயக்கர வரை ஒண்ணும் பெரிசா கவர்ச்சியா இல்லாம மேக் அப் இல்லாத பட கதாநாயகி மாதிரி இருக்கலாம்ன்னு சொன்னேன். பவர் ஆன் செய்த பின்னே கவர்ச்சிப்பட கதாநாயகி மாதிரி இருக்கும்!ரைட் மேஏஏஏலே ஒரு சின்ன பட்டை தெரியுதாஅது ஸ்டேடஸ் பார்இதில இடது பக்கம் இருக்கறது நாட்டிபிகேஷன் பார்இருபத்து எட்டரை மெய்ல் வந்திருக்குநாலு ஆப்ஸ் இன்ஸ்டால் ஆயிருக்குநீ பாட்டுக்கு நோண்டிக்கிட்டே இருந்ததால இப்ப பாட்டரி 40 % தான் சார்ஜ் இருக்குஎன்கிற ரீதியில இந்த ஸ்மார்ட் போன் நமக்கு சொல்ல வேண்டிய செய்தி எல்லாம் இங்கே சின்ன குறிப்பா பார்க்கலாம். இந்த படத்தில பாட்டரி சார்ஜ் மட்டுமே காட்டுது. வலது பக்கமா இருக்கிறது போன் ஸ்டேடஸ்ரெண்டு ஸிம் கார்டுல ஒண்ணுதான் இருக்குவிலான் கனென்க்ட் ஆயிருக்குப்ளூ டூத் செயல்ல இருக்குசாக்கிரதை மாதிரி சமாசாரம் எல்லாம் இங்க தெரியும்வலது கோடில நீ பாட்டுக்கு இத நோண்டிகிட்டே இருக்கையேமணி ராத்திரி ஒண்ணாச்சு ன்னு நேரம் காட்டும்
இந்த ஸ்டேடஸ் பாருக்கு கீழே பெருமளவு திரையை ஆக்கிரமிக்கிற இடம் நம்ம டெஸ்க்டாப் மாதிரி. இதுக்கு ஹோம் ஸ்க்ரீன் ன்னு சொல்லறாங்க. லீனக்ஸ்ல இருக்கற மாதிரி ஒண்ணுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப் இருக்கலாம். இப்படி இருக்கான்னு பார்க்க கட்டை விரலை ஸ்கிரீன்ல கீழேயும் ஆள்காட்டி விரலை ஸ்க்ரீன்ல மேலேயும் வெச்சு இரண்டு விரல் நுனிகளையும் ஒண்ணா கொண்டு வாங்க. ஸ்க்ரீனை தேச்சுக்கொண்டுதான்! கட்டம் கட்டமா ஸ்க்ரீன்களை பார்க்கலாம். அதுல ஒண்ணுத்துல + குறி போட்டு இருக்கும். அதை அழுத்தினா இன்னொரு ஸ்க்ரீன் கூடுதலா சேர்க்கப்படும். இது ஒவ்வொண்ணுத்துலேயும் நமக்கு சௌகரியமான ஆப்ஸ் உடைய ஷார்ட் கட்டை வகைப்படுத்தி வெச்சுக்கலாம். உதாரணமா அடிக்கடி செட்டிங்ஸ் பார்க்கறோம், நிமிஷத்துக்கு ஒருதரம் மெய்ல் வந்திருக்கா பார்க்கிறோம் ன்னா சம்பந்தப்பட்ட ஐகான்களை ஹோம் ஸ்க்ரீன்ல வெச்சுக்கலாம். காமிரா பயன்படுத்த காலரி பார்க்கன்னு தனியா ஒரு ஸ்க்ரீன்ல வெச்சுக்கலாம். இப்படி ஷார்ட் கட் வெச்சுக்கறது மெனு வழியா போகிறதை விட சுலபமானது.

சரி, மேலே போகும் முன்னே விரல்களை பயன்படுத்தறதைப் பத்தி பார்க்கலாம். விரலால ச்சும்மா தொடறது ஒண்ணு -டச். ரெண்டு முறை தொடறது ஒண்ணு -டபுள் டச். தொட்டு கொஞ்ச நேரம் - சில வினாடிகள்- அப்படியே வைத்து இருக்கிறது ஒண்ணு. இது லாங் ப்ரெஸ். தொட்டு விரலை இழுக்கிறது ஒண்ணு- ஸ்வைப். இது சொடுக்கியால சொடுக்கி இழுக்கற மாதிரி. செத்த முன்ன கட்டம் கட்டமா ஸ்க்ரீன் நிறைய பார்க்க செஞ்சோமில்லையா? ரெண்டு விரல்களை ஒண்ணா கொண்டுவர மாதிரி இழுக்கிறது - இது பின்ச். இதுக்கு எதிரா சேர்த்து வெச்சு தொட்டுக்கொண்டு இருக்கற விரல்களை பிரிக்கிறது ஸ்ப்ரெட். இப்ப இதை கொஞ்சம் கவனம் வெச்சுக்கோங்க. பின்னால படத்தை பெரிசா பார்க்க ஸ்ப்ரெட் பண்ணுங்கன்னு சொன்னா முழிக்கப்படாது
கடைசியா தொட்டு வட்டமா சுழற்றவும் முடியும். ரொடேட்ஸ்க்ரீனை 90 டிகிரி சுழற்ற பழகலாம். இதை பின்னால பார்க்கலாம்.


7 comments:

 1. புரிஞ்சுக்கக் கஷ்டமா இருக்கறதாலத்தானே
  கூகிள் ஃபோனையே தொடாம வைத்திருக்கேன்.
  அண்ட்ராயடு எனக்கு வேண்ட்டாம் சாமி:)

  ReplyDelete
 2. :-)) அக்கா அப்படின்னா உங்களுக்கு இந்த போஸ்ட் டெடிகேட்டட்!

  ReplyDelete
 3. :)))). ஆண்ட்ராய்டு ஃபார் டம்மிபீஸ்:)))

  ReplyDelete
 4. ஏற்கனவே எழுத ஆரம்பிச்சிட்டீங்களா? ரைட்டு உங்க கோனார் நோட்ஸுக்கும் என்னோட பதிவுல லிங்க் குடுத்துடறேன் :))

  ReplyDelete
 5. ஷங்கர் நன்றி. நான் எழுதறது பேசிக்ஸ் ஆ மட்டுமே இருக்கும். ஆரம்ப பயனாளிகளுக்காக.

  ReplyDelete
 6. LK, ஆமாம். ஆண்ட்ராய்டே கூகுளோட ஓஎஸ் தான். தயாரிக்கிறவங்க மாத்தாத ஓஎஸ் உடன் இருக்கிற ஆண்ட்ராய்ட் போன்களை சில கம்பனிகள் நெக்ஸஸ் என்கிற பெயரோட விக்கிறாங்க.

  ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!