Wednesday, November 28, 2012

அன்ட்ராயர், Android -3

key words: android, ICS, beginners, elders, howto android phone.Tamil.


மெனுவை பார்க்க போகுமுன் நாட்டிபிகேஷன் பாரை இன்னும் கொஞ்சம் பார்க்கலாம். அண்ட்ராயர்ல ஒரு அண்ட்ராயர், ச்சே, ட்ராயர் இருக்கு. நாட்டிபிகேஷன் பாரை தொட்டு கீழே இழுத்தா அது சமத்தா விரிஞ்சு வரும். குறிப்புகளா பாத்த நாட்டிபிகேஷன்களை இப்ப விரிவா பார்க்கலாம். பத்து மெசேஜ் இருக்குன்னு சொல்லித்துன்னா அந்த மெசேஜை தொட அது ஷார்ட் கட்டா செயல் பட்டு மெசேஜ் எல்லாத்தையும் காட்டும். நாட் எல்லாம் பாத்தாச்சுன்னா அதுக்கு மேலே இருக்கிற பெரிய X ஐ அழுத்த எல்லாம் காணாமப்போகும்.  ட்ராயரை மூட கீழிருந்து மேலே அத இழுத்து விட வேண்டியதுதான். அல்லது இடது பக்கம் வளைஞ்ச - பேக் - அம்புக்குறியை அழுத்தலாம்.


ரைட் இப்ப மெனுவை பார்க்க போகலாம். இதை லாஞ்சர்ன்னும் சொல்வாங்க. கட்டம் கட்டமா இருக்கிற ஐகான்தான் மெனுவோடது. இது கொஞ்சம் பழைய செட்ல மென் பொத்தானாகவும் இருக்கலாம். இதை தொட திரையில நிறைய ஐகான்கள் தெரியும். எல்லாமே ஷார்ட்கட் மாதிரி.

பொதுவாகவே நம்ம ஸ்மார்ட் போனை ஒரு புத்தகம் மாதிரி நினைச்சுக்கலாம். நம்ம பார்வையில ஒரு பக்கமே இருந்தாலும் புத்தகத்தில அடுத்த பக்கத்தை புரட்டற மாதிரி, ஸ்மார்ட் போன்ல அடுத்த பக்கம் மறைஞ்சு இருக்கு;  அதை தொட்டு ஓரத்திலேந்து நடுவுக்கு இழுக்க வேண்டியதுதான். இது கீழ்- மேலேயோ அல்லது வலது இடதோ இருக்கலாம். முன் பின் பக்கத்தை புரட்டற மாதிரி இடது வலது. கீழே இருக்கிற படத்தை பாருங்க. ஜிமெய்ல் ஐகானை தொட அது திறந்து ஒரு மெய்லை தொட அதை காட்டுது. இப்ப இதன் கீழே ஓல்டர், ந்யூயர் ன்னு இருக்கிறதை பாருங்க. அந்த பக்கம் புது பழைய மெய்ல் இருக்குன்னு காட்டுது. (ஐயப்பன் கோச்சுக்க மாட்டார்ன்னு நினைக்கிறேன்!)


இது நினைவில இருந்தா பல விஷயங்கள் சுலபம். லாஞ்சர்ல திரை முழுக்க ஐகான் தெரியுது; ஆனா நாம் தேடற செட்டிங்ஸ் ஐகானை காணலை! அது எஸ் ல ஆரம்பிக்கிறதால இன்னும் பின்னால வரும்! மெனுவோட அடுத்த பக்கத்தை பார்க்க வலது விளிம்புலேந்து மையத்துக்கு விரலை வெச்சு இழுக்க வேண்டியதுதான். இழுத்த இழுப்புக்கு பக்கம் ஓடி வரும். இப்படியே அடுத்தடுத்த பக்கங்களை பார்க்கலாம். அடுத்த பக்கம் ஏதும் இல்லைன்னா திரை பாதி தூரம் இழுபட்டுவிட்டு எலாஸ்டிக் சுருங்கறா மாதிரி திருப்பி பழைய திரைக்கு போயிடும்! முன் பக்கம் போகிறதும் சுலபம்தான். எதிர் திசை- அதாவது இடது விளிம்புலேந்து மையத்துக்கு விரலை இழுக்கணும். இப்படி எழுத கஷ்டமா இருக்கே ஒழிய சுலபமா பழகிடலாம். வேலை செய்ய ரொம்ப ஜாலியாவே இருக்கும்!

நமக்குத் தேவையான அப்ளிகேஷனை துவக்க அதோட ஐகானை தொட வேண்டியதுதான்.
சில சமயம் திரையிலே இருக்கிற எக்கச்சக்க ஐகான்களை எல்லாம் தூக்கிபோட்டுட்டு ஸ்கிரீனை துடைச்சுவிட்டா நல்லா இருக்கும் போல தோணும். துடைச்சே விடலாம். ஐகானை கொஞ்ச நேரம் தொட்டுக்கொண்டு இருந்தா சின்னதா ஒரு 'கிர்' ஐ உணரலாம். அது நம் விரல்ல ஒட்டிகிச்சுன்னு அர்த்தம். அப்படியே மேல இடது மூலைக்கு இழுத்துபோக அங்க டெலீட் ன்னு தெரியும். அங்க விட்டாச்சுன்னா ஐகான் காணாம போயிடும். இதை விட சுலபமா இருக்க முடியுமா?! அதையே மேல் வலது மூலைக்கு கொண்டு போக 'அன் இன்ஸ்டால்' ன்னு காட்டும். அங்கே விட்டுவிட்டா இந்த அப்ளிகேஷனை தூக்கிரவான்னு கேட்கும்! தூக்குன்னா கசாப் கதை மாதிரி முடிஞ்சது!

No comments:

Post a Comment

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!