Thursday, November 29, 2012

அன்ட்ராயர் -4


key words: android, ICS, beginners, elders, howto android phone.Tamil.
-------------------------------------------------------------------
ஆண்ட்ராய்டை பயன்படுத்தறதை ஆரம்பிக்கும் முன்னே ஒரு முக்கிய விஷயம் புரிஞ்சுக்கிறது நல்லது. மத்த செல் போன் மாதிரி இல்லை இது, 1கிக் ப்ராஸசர், நாலு இஞ்ச் ஸ்கிரீன்னு இருக்கற சமாசாரம். அதனால் பேட்டரி லைப் ரொம்பவே கம்மியா இருக்கும். அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். ஹெவ்வியா பயன்படுத்தினா ஒரு நாளுக்கு ரெண்டு தரம் கூட சார்ஜ் செய்ய வேண்டி இருக்கலாம். பயப்படாதீங்க! இதை எல்லாம் சமாளிக்க பல வழிகள், ஆப்ஸ் இருக்கு! முதல்ல தேவையில்லை, உபயோகத்துல இல்லைன்னா ஜிபிஎஸ், ப்ளூடூத், வி-லான் எல்லாத்தையும் தொட்டு அணைச்சுடுங்க! (யார்ப்பா அங்க மொறைக்கறது? அர்த்தம் அவங்கவங்க மனசில சரியா படணும்!) பேக் க்ரௌண்ட்ல எதாச்சும் குதி குதின்னு குதிக்கிற மாதிரி வால் பேப்பர் எல்லாம் இருந்தா மாத்தி ஒரு நல்ல படத்த போடுங்க. அப்புறம் மெனு> செட்டிங் > டிவைஸ் ல பாத்தா எதெல்லாம் பாட்டரி சக்தியை சாப்பிடுதுன்னு தெரியும். தேவையான நடவடிக்கை எடுக்கலாம். ஆப்ஸ் சமாசாரம் அப்புறமா பார்க்கலாம். குறிப்பா ஸ்க்ரீன் வெளிச்சத்தை குறைக்கிறது. வெயில்ல போனா அதிகமாக்கிக்கலாம்.



முதல் முதல்ல தட்டுத்தடுமாறி போனை ஸ்விட்ச் ஆன் செய்தப்பறம் அது உங்க கூகுள் அக்கவுண்ட் விவரம் கேக்கும்! ஆண்ட்ராய்ட் கூகுள் ஓஎஸ்தானே? கூகுள் சர்வீஸ் எல்லாத்தையும் இதுல கொடுக்கணும்ன்னு யோசிக்குது! அதனால அதோட விவரம் வேணும்.

என்னாஆஆஆது? கூகுள் அக்கவுண்ட் இல்லையா? என்னாங்க சார் நீங்க... போனா போவுதுன்னு அதுவே ஒரு அக்கவுண்ட்டை துவக்க அனுமதிக்கும். ஆமா, நீங்க சிம் கார்டை உள்ள போட்டீங்களா, இல்லையா? அட அது வேற வேணுமான்னு கேக்கறீங்களா? ஆமா சார் ஆமா! அது இல்லாம போன் வேற கேக்குதா உங்களுக்கு?
( போனோட பின்பக்க மூடிய கழட்டி போடறதே ஒரு கலை. அனேகமா நாம கடைக்காரர்கிட்டே கொடுத்து போடச் சொல்லி இருப்போம். அவர் 'பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரக்' ன்னு அத பிரிச்சு போடறப்ப பயமாவே இருக்கும்!)

என் சிம் கார்டுல இன்டர்நெட் கனென்க்ட் பண்ண முடியாதேன்னு சொல்லறீங்களா? பரவாயில்லை. விலான் ஐ துவக்கி உங்க பையன் வெச்சிருக்கிற ப்ராட்பேண்ட் வயர்லெஸ் மோடத்தோட கனெக்ட் பண்ணிக்கலாம். என்ன அதோட விவரம் வேணும். அவ்ளோதான்.
ரைட்! கூகுள் அக்கவுண்ட் அமைச்சாச்சு. அது தானா மெய்ல் அல்லாத்தையும் கொண்டு வந்து நாட்டிபை பண்ணும். நா. ட்ராயரை கீழே இழுத்து அதை தொட்டதும் மெய்ல் ஐ காட்டும். முன்னேயே மெய்ல் பார்க்கிறது எப்படின்னு சொல்லியாச்சு இல்லே?

No comments:

Post a Comment

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!