Sunday, August 20, 2017

ஜிபோர்ட் தமிழ்



போஸ்ட் போட்டு ஒரு மாமாங்கம் ஆச்சேன்னு...ஹிஹி மாமாங்கம் எல்லாம் ஆகலை. இருந்தாலும் ரொம்ப நாளாச்சேன்னு ஒன்னு போடலாமான்னு.. ன்னு...ன்னு. நம்ம நிறைய பேருக்கு தமிழ்ல எழுத பிடிக்கும். அட! நம்ம தாய் மொழில நாம எழுதாம யார் எழுதுவாங்க? இருந்தாலும் பாருங்க இந்த அலை பேசியில .. அதாங்க செல் போன்ல,  தமிழ்ல எழுத கொஞ்சம்.... ஆமா கொஞ்சமே கொஞ்சம்தான், கஷ்டம். என்ன செய்யலாம்? என்னதான் ஹாண்ட் ரைட்டிங் வழி இருக்குன்னாலும்....
அட, பேச்சு டைப் ஆகும் என்கிறப்ப எதுக்குங்க டைப்பனும்? இல்லை தேய்க்கணும்?
ஆமா. கூகுளுக்கு ஒரு நமஸ்காரம் போட்டுட்டு வேலையை ஆரம்பிங்க. அலைபேசில நிறுவ வேண்டியது ஜிபோர்ட். இங்கே சுட்டி: https://play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin&hl=en
நூத்தி சொச்சம் எம்பி. பரவாயில்ல இல்ல?

இன்ஸ்டால் ஆயிடுத்தா? இப்ப இன்புட் ஐ கான்பிகர் செய்யலாமா?



செட்டிங்க்ஸ்ல லாங்குவேஜ் அன்ட் இன்புட் மெதட்க்கு போங்க. இது ஒவ்வொரு கம்பனி செல்போனிலேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். ஆனா அங்க போயிட்டா அப்புறம் வேலை ஒரே மாதிரிதான்.






இங்கே கூகுள் வாய்ஸ் டைப்பிங் ன்னு தெரியறதா? பாத்து வெச்சுக்குங்க.

 ஜிபோர்ட் ன்னு தெரியறதா? அதை அமுக்குங்க. 

லாங்குவேஜஸ் ஐ அமுக்குங்க. சாதாரணமா முதல் என்ட்ரி சிஸ்டம் மொழியை பயன்படுத்தச்சொல்லும். அதை நீக்குங்க.

 



அடுத்து ஆக்டிவ் இன்புட் மேதட்ல தமிழை கண்டுபிடிங்க. தமிழ் இந்தியா க்கு ஒரு செக். அப்புறம் ஸ்வைப் மாதிரி இங்க க்லைட் . அதாவது தேய்க்கற வழி. அது வேணும்ன்னா அதையும் செக் பண்ணுங்க.
 







திரும்பி வரலாம். மேலே செட்டிங்க்ஸ் ஐ ஒன்னும் செய்ய வேணாம். தமிழ்ல ஆப்லைன் டைப் வழி இன்னும் வரலை. ஆங்கிலத்துல ஆப்லைன் டைப் செய்ய முடியும்.
அதாவது தமிழ்ல பேசி டைப் ஆக இணையத்தில இருக்கணும். இப்பலாம் இது பெரிய பிரச்சினை இல்லை.
 



வாய்ஸ் டைப்பிங் ன்னு ஒன்னு முன்னே பாத்தோம் இல்ல? அதை தொட்டு உள்ளே போங்க. அங்கே லாங்குவேஜஸ் அமுக்கி உள்ளே போங்க.


தமிழ் தேர்ந்தெடுங்க.





ரைட்! ஆச்சா? சும்மா கொஞ்சம் டைப் செய்யலாமா? க்குள் ப்ளஸ்ஐ திறந்து ரைட் தேர்ந்தெடுங்க. ரைட் சம்திங்.... கீபோர்ட் வரதா? இப்ப அதில ஜிபோர்ட் தமிழுக்கு போகணும். ஸ்க்ரீன்ஷாட் பாருங்க.
போயாச்சா? இப்ப அங்கே தெரியற மைக்கை தொடுங்க. பேச ஆரம்பிக்கலாம்.




அதுக்குன்னு அந்த கால சிவாஜி கணேசன் வீர வசனம் பேசறா மாதிரி இல்லே. கொஞ்சம் நிதானம் வேணும். பேச பேச டைப் ஆகும். கொஞ்சம் தப்பு வரும்தான். பரவாயில்லை. நிறைய பேர் இதை பயன்படுத்த ஆரம்பிச்சா இம்ப்ரூவ் ஆயிடும். டைப் அடிக்கறதை விட இது பரவாயில்லை, இல்லியா?




போகிற போக்கில இன்னொன்னும் பாத்துடலாம். க வை தொட்டு இழுத்து ஆ தொட்டா கா வரும். அதே போல தொடர்ந்து இழுத்தா க்லைட் வழியில டைப்பலாம்.


 

2 comments:

  1. பல்லு போனா சொல்லு போச்சுன்னு நிரூபிக்கிறது. எனக்கு ஒரு வார்த்தைகூட சரியா வரல்லே. அகத்துக்காரி பேசினா அருமையாப் புரிஞ்சுக்கறது. தப்பே வரல்லே

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!