Sunday, August 27, 2017

லிசன் அன்ட் ரைட்

நல்லா இருக்கீங்களா?
இன்னைக்கு சிலருக்கு ரொம்ப உதவியா இருக்கக்கூடிய ஒரு மென்பொருளை பார்க்கலாமா?
என்ன வேணாமா? அதெல்லாம் கிடையாது. பார்த்தே ஆகணும்!
சிலர் ஒரு சர்வீஸா கேட்ட கேட்கிற சில உரைகளை - அதாங்க ஸ்பீச் - எழுத்திலே கொண்டு வருவாங்க. அது வேற மொழியில இருக்கலாம். ஆங்கில உரை ஒண்ணை தமிழ் உலகத்துக்கு கொண்டு வர செய்கிற முயற்சியா இருக்கலாம். அல்லது தமிழ்ல இருக்கிற உரையை மத்தவங்களும் பயன் பெறட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில ஆங்கிலத்தில செய்யறதா இருக்கலாம். எப்படி இருந்தாலும் அந்த மாதிரி முயற்சிய பாராட்டனும் இல்ல? பாராட்டுவோம்.
இவங்களுக்கு ஒரு உதவியா ஒரு மென்பொருள்.
சாதாரணமா இப்படி செய்யறப்போ அந்த விடியோவையோ அல்லது ஆடியோவையோ இயக்க விட்டு ஒரு லைன் கேட்டதும் பாஸ் (pause) போட்டுவிட்டு அதை மொழிபெயர்த்து எழுதுவாங்க. அப்புறமா திருப்பி ஓட விட்டு அடுத்த லைனை கேட்பாங்க.
எளிமையான வார்த்தைகளா சின்ன சின்ன வரிகளா இருக்கற வரை ரொம்ப பிரச்சினை இருக்காது. ஆனா எல்லா ஸ்பீச்சுமே அப்படி இராது. சில சமயம் திருப்பி கேட்க வேண்டி இருக்கும். ரெகார்டிங் தெளிவா இல்லாம போனாலும் இப்படி திருப்பி கேட்க வேண்டி இருக்கும். தடதடன்னு பேசிண்டு போறவங்களுக்கு நிச்சயம் திருப்பி கேட்க வேண்டி இருக்கும்.
இங்கே பிரச்சினை என்னன்னா எப்படி ரீவைண்ட் செய்யறது? சாதாரணமா பாஸ் போட்டதை கர்சரை பிடிச்சு இழுத்து பின் பக்கமா விட்டு திருப்பி ஓட விட்டு கேட்கணும். அனேகமா இதை துல்லியமா எல்லாம் செய்ய முடியாது. நமக்கு தேவையானதுக்கும் முன்னே இருக்கிற கேட்டதை - ஏற்கெனெவே எழுதினதை திருப்பி கேட்க வேண்டி இருக்கும். இது ஒரு தரம் ரெண்டு தரம் நடந்தா ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லை. ஆனா அடிக்கடி நடந்தா? நிறைய நேரம் வீணாகும்.
ரைட். இங்க போய் மென்பொருளை தரவிறக்கி நிறுவுங்க. http://download.cnet.com/Listen-N-Write/3000-2170_4-75416316.html
அதை துவக்கினா மென்பொருளோட விண்டோ திறக்கும்.


கூடவே நோட் பேடும். (இந்த நோட் பேட் வேணாம்ன்னா வேணாம்ன்னு செட்டிங்ல மாத்தலாம். உங்க அபிமான டெக்ஸ்ட் எடிட்டரை நீங்களே துவக்கிக்கலாம்)


 'பைல்' போய் தேவையான பைலை திறந்து வேலையை ஆரம்பிக்கலாம்.

  
முன்ன மாதிரி பாஸ் போட்டு எழுதி ப்ளே போட்டு திருப்பி கேட்க ஆரம்பிக்கலாம். இங்கதான் மென்பொருளோட திறமை இருக்கு. திருப்பி ஆரம்பிக்கறப்ப அது விட்ட இடத்திலேந்து ஆரம்பிக்காது. இரண்டு அல்லது மூணு செகன்ட் முன்னேலேந்து ஆரம்பிக்கும்! ரொம்ப சுலபமா எழுதினதை சரி பார்த்துக்கலாம்; அல்லது திருப்பி கேட்டுக்கலாம். இன்னும் முன்னே சொன்னதை கேட்க ஷட்டில் பேக் பட்டன அமுக்க அமுக்க இன்னும் இன்னும் பின்னே போகும். சிம்பிள்!




கொஞ்ச நேரம் வேலை செஞ்சு அப்பறமா ஆரம்பிக்கனும்ன்னா புக்மார்க் இருக்கு. மூடு முன்னே அதை செட் செய்யலாம். எப்பவும் இதோட விண்டோ மேலேயே இருக்கவும் செட் செய்யலாம். சில செகன்ட் பேசி எழுத டைம் கொடுத்து மேலே பேசறதையும் செட் செய்யலாம். எல்லாத்தையும் சோதனை செஞ்சு பாத்து பிடிக்கிற வகையில் செட் செஞ்சுக்கோங்க!
சுபம்!

No comments:

Post a Comment

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!