ரைட் இப்ப இன்னொரு சூப்பர்
ஆப் ஒன்னை பார்க்கலாம். அது போட்டோ ஸ்கேனர்.
நிறைய பழைய போட்டோக்கள் ஆல்பமா
வீட்டில இருக்கும். நமக்குத்தான் வயசாச்சா, எப்போவாவது அத எடுத்து பாக்கிறப்ப
மலரும் நினைவுகள் சோக கீதத்தோட வரும். அட இது நம்ம பயல சின்ன்ன்னன்ன வயசில
எடுத்தது. இப்ப அவன் இத பாத்தா... ஹிஹிஹி.. போட்டோ எடுத்து அனுப்பலாமான்னு தோணும்.
ரைட் செல்போன்தான் இருக்கே,
எடுத்து அனுப்பி சர்ப்ரைஸ் பண்ணலாம்ன்னு அலைபேசிய எடுப்போம். போட்டோ எடுத்தா அதுல
ஒரு க்ளேர் வரும். ச்சே! என்ன செய்யறது. எப்படி எடுக்கப்பாத்தாலும் அத தவிர்க்க
முடியாது. அதுவும் ப்ளாஷ் இருந்தா கேட்கவே வேணாம்.
ஏன்னா அதோட சர்பேஸ் – பரப்பு
அப்படி. வர வெளிச்சத்தை திருப்பி அனுப்பும். திரும்பி அது வரும் வழில காமிராவோட
கண்ணு இருந்தா படத்தில க்ளேர் வரும். உதாரணத்துக்கு படத்தை பாருங்க.
லாமினேட் செஞ்ச டாகுமென்ட்ஸ் கதியும் இதேதான்.
இத தவிர்க்க ஒரு வழி கொஞ்சம்
கோணலா எடுக்கறது. ஆனா படம் மோசமா தெரியுமே!
ம்ம்ம் வருத்தப்படாதீங்க!
இந்த ஆப் ஐ தரவிறக்கி நிறுவுங்க. பேரு போட்டோ ஸ்கேனர்.
ஆச்சா? இப்ப இதை துவக்குங்க. முதல்படி
ப்ரேம்குள்ள படத்தை கொண்டு வரது. அடுத்து ஒரு படம் எடுக்கலாம்.
இப்ப இந்த ஆப் தானே
அதை அனலைஸ் பண்ணிடும். அடுத்து இந்த வட்டத்துக்குள்ள முழு வெள்ளை வட்டம் வரா
மாதிரி போனை அட்ஜெஸ்ட் செய்ப்பான்னு சொல்லும். ஒரு அம்புக்குறியும் போட்டு எந்த முழு
வெள்ளை வட்டம்ன்னு காட்டும்.
ரைட். இப்ப போனை நகத்தி சொன்னதை செய்யுங்க. தானா
இன்னும் படம் எடுத்துக்கும். அடுத்த வட்டத்தை காட்டும். இதே போல நாலு மூலையும்
செஞ்சா வேலை முடிஞ்சது!
இப்ப ஆப் ஒரு படத்தை எடுத்துகிட்டு க்ளேர் இருக்கற இடத்தை
மத்த படத்திலேந்து எடுத்து போட்டு நிரவி படத்தை தயார் செஞ்சுடும்.
நாம் ச்சும்மா
அலைபேசியாலத்தானே எடுத்தோம்? அது சரியா செவ்வகமா வராம இருக்கலாம். அதை அட்ஜஸ்ட்
செய்ய ஒரு வாய்ப்பு கொடுக்கும்.மூலைகளில இருக்கற வட்டங்களை தொட்டு இழுத்து படத்தில மூலைகள் வரவேண்டிய இடத்துக்கு இழுத்து விட்டு சரி செய்யலாம். அப்புறம் டன் சொன்னா ஆச்சு.
இப்ப பையனுக்கு போட்டோவை
அனுப்பி அசத்துங்க!
No comments:
Post a Comment
உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!