உம்ம்ம்.
என்னை பீடிச்ச
கெட்ட காலம் போயிடுத்து
போலிருக்குன்னு தோணித்து.
அப்படி
இல்லைன்னு நேத்து புரிஞ்சது.
சில
மாசங்களாவே நேரம் சரியில்லைன்னு
அடக்கி வாசிச்சுகிட்டு
இருக்கேன். விதி
விடுமா என்ன?
நான்
வழக்கமா பயன்படுத்தறது
உபுண்டு. விண்டோஸ்
பக்கம் தேவை இருந்தாத்தான்
போவேன். உபுண்டு
ஆறு மாசத்துக்கு ஒரு தரம்
புது ஓஎஸ் வெர்ஷன் ரிலீஸ்
செய்யறாங்க. சிலதுக்கு
5 (முன்னே
3) வருஷத்துக்கு
அப்டேட்ஸ் சப்போர்ட் கிடைக்கும்.
ஒழுங்கா
வேலை செஞ்சா அப்டேட் செய்யாதே
என்கிறது என் பிலாசபி.
பல வருஷங்களுக்கு
முன்னே மாஞ்சு மாஞ்சு பீட்டாவை
கூட இன்ஸ்டால் செஞ்சிருக்கேன்.
இப்பல்லாம்
வயசாயிடுத்து; முன்னே
இருந்த உற்சாகம் இல்லே.
மேலும் ஒரு
மணியாவது உக்காந்து நமக்கு
தேவையானதை எல்லாம் இன்ஸ்டால்
பண்ணி கான்பிகர் பண்ணனும்.
குறிப்பா
தமிழ் இன்புட் ஒரு பிரச்சினை.
இருந்தாலும்
சில பல பிரச்சினைகளுக்காக
அப்டேட் செய்யலாம்ன்னு
தோணித்து. இப்ப
ஏப்ரல் 2018 ல
வந்திருக்கறது லாங் டெர்ம்
ரிலீஸ். 5 வருஷ
சப்போர்ட் உண்டு. கொஞ்ச
நாளா பிரச்சினை டிபார்ட்மெண்ட்ல
புதுசாவும் எதுவும் இல்லே.
ரைட்ன்னு
டவுண்லோட் செஞ்சாச்சு.
அப்புறமா
'ஏண்டா,
புதுசா
இன்ஸ்டால் செய்யும் முன்னேயே
அப்ட்டே செஞ்சுக்கோன்னு
அலறுவானே; காணமேன்னு
பாத்தேன். ஃபோரம்
எல்லாம் அலசி பாத்ததிலே
இப்பலாம் அது மெதுவாத்தான்
வரதாம். சரி
டவுண்லோட் பண்ணியாச்சே,
இன்ஸ்டாலே
செஞ்சுடலாம்ன்னு நேத்து
ஆரம்பிச்சேன்.
இப்ப
சில வருஷங்களா யூஈஎஃப்ஐ ன்னு
ஒண்ணு. பழைய
பயாஸ்லேந்து மாறி வேற சிஸ்டம்.
சமீபத்திய
மதர்போர்ட் எல்லாம் இதை
சப்போர்ட் செய்யறது.
போன வருஷம்
மதர்போர்ட் மாத்த வேண்டிய
அவசியம் வந்து மாத்திட்டேன்.
விண்டோஸ்
இண்ஸ்டால் செய்யறப்பவே இந்த
மாதிரி செய்யவான்னு கேட்டுது.
அப்ப உபுண்டு
இதை சப்போர்ட் செய்யலைன்னு
நினைக்கறேன். இல்லை
வேற காரணம் இருந்திருக்கலாம்;
நினைவில்லை.
அப்ப பயாஸையே
பயன்படுத்தறா மாதிரி இன்ஸ்டால்
செஞ்சேன்.
5-6 வருஷம்
முன்னே எல்லாம் இந்த மாதிரி
இன்ஸ்டாலர் அப்பப்ப நிறைய
சாய்ஸ் கொடுத்து அடுத்த அடுத்த
ஸ்டேஜ்ன்னு போகும்.
இப்பல்லாம்
நிறைய சிம்ப்ளிவை செய்யணும்ன்னு
நம்ம கீபோர்ட் டைப்,
ரீஜன்,
யூசர் ஐடி,
பாஸ்வேர்ட்
தவிர ஒண்ணும் கேக்கறதில்லை.
மாஞ்சு
மாஞ்சு சீக்கிரமாவே இன்ஸ்டால்
பண்ணிட்டு கடேசில பூட் செய்யற
க்ரப் ஐ இன்ஸ்டால் செய்ய
முடியலை.யூஈஎஃப்ஐ
இன்ஸ்டால் செய்ய தோதான பார்டிஷன்
இல்லை, சாரி
ன்னு சொல்லிடுத்து. இங்க
சொதப்பிட்டாங்க! முன்னேயே
அங்கே என்ன இருக்குன்னு
ஆராய்ஞ்சு அதுக்கு தகுந்தபடி
இன்ஸ்டால் செய்ய வேணாமா?
ஒழியறதுன்னு
ரீ பூட் பண்ணா ஒண்ணுமே பூட்
ஆகலை. க்ரப்
ரெகவரின்னு நிக்கறது!
யூஎஸ்பி
ட்ரைவை திருப்பி சொருகி இந்த
தரம் இன்னும் உன்னிப்பா
இன்ஸ்டாலேஷனை கவனிச்சேன்.
அதே பிரச்சினைதான்.
மூணாவது
தரம் பூட் பண்ணி க்ரப் ரிபேர்ன்னு
ஒண்ணை நிறுவி எம்பிஆரை திருப்பி
எழுத வெச்சு அப்புறம் பூட்
பண்ணா விண்டோஸ் ரெகவர் ஆயித்து.
உபுண்டு
போயே போயிந்தி!
ஹும்!
முன்னே
இன்ஸ்டால் ஆயிருந்த பழைய
வெர்ஷனையே திருப்பி இன்ஸ்டால்
செய்யலாம்ன்னு முடிவெடுத்து
இன்னைக்கு மதியம் இன்ஸ்டால்
செஞ்சேன். இந்த
தரம் சமத்தா இன்ஸ்டாலர்
யூஈஎஃப்ஐ க்கு சரியான பார்டிஷன்
இல்லை, பரவாயில்லைன்னு
இன்ஸ்டால் பண்ணவா,
திரும்பி
போறயான்னு கேட்டுது.
யெய்யா....
திரும்புன்னு
சொல்லிட்டு ஆமா இந்த பழைய
ஸ்க்ரீன்ல நின்னு என்ன செய்யன்னு
யோசிக்கறப்பவே அதுவே அடுத்த
ஸ்டேஜுக்கு போய் ஒழுங்கா
எல்லாம் நிறுவிடுத்து.
ரீ பூட்
செஞ்சு திருப்பி எல்லாத்தையும்
கான்பிகர் செய்யறதுக்குள்ள,
அப்பாடி!
தமிழ்
இன்புட் லேசுல கான்பிகர்
ஆகலை. வழக்கமான
வழி, நிறுவ
வேண்டியது எல்லாம் ஒரு இடத்தில
எழுதி வெச்சு இருக்கேன்.
மறதி
அதிகமாயிடுத்து இல்லையா?
வேண்டியதை
எல்லாம் நிறுவிட்டு கான்பிகர்
பண்ணப்போனா தமிழ் பொனடிக்
சாய்ஸ் வரவே இல்லை! நெட்ல
ஆராய்ஞ்சு ரெண்டு மூணு வழி
பாத்து எதுவும் வேலைக்காகலை.
அப்புறமா
ஒத்தர் உனக்கு இந்த மாதிரி
தெரிய வேண்டிய சாய்ஸ் எல்லாம்
தெரியலைன்னா இந்த கமாண்ட்
கொடுத்துட்டு அப்புறம்
பாருன்னு சொல்லி இருந்தார்.
சாய்ஸ் இப்ப
ரொம்ப அதிகமாயிடுத்து போல
இருக்கு; அதுக்கு
ஒரு கட்டுப்பாடு வெச்சு
இருக்காங்க. அதை
செஞ்ச பிறகு சாய்ஸ் தெரிய
வேலையை முடிச்சேன்.
எல்லாம்
சுபம்.
புருஷன்
அடிச்சாலும் அடிச்சான்,
கண்ணு புளிச்சை
போச்சு என்கற கதையா இப்ப
சிஸ்டம் முன்னைவிட வேகமாவே
வேலை செய்யறது!
No comments:
Post a Comment
உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!