Tuesday, July 16, 2013

ஆண்ட்ராய்ட் - அப்டேட்!


பாத்து ரொம்ப நாளாச்சுல்லே? சௌக்கியமா?
சமீபத்தில ரெண்டு அப்ளிகேஷன் நிறுவினேன். நல்லா இருக்கு. அதுக்குத்தான் இந்த போஸ்ட்.
டச்போன்ல டைப் அடிக்க நாம வழக்கம் போலத்தானே லொட் லொட் ன்னு தட்டறோம்? சரி சரி லொட் லொட் ன்னு இல்லைன்னாலும் தட்டத்தான் வேண்டி இருக்கு. அட டச் போன்ல இப்படி இழு அப்படி இழு ன்னு எல்லாம் சொல்லிட்டு தட்டச்சொன்னா எப்படி? இழுத்தா என்ன? அதுல ஒரு கஷ்டம் … தொட்டு விரல எடுக்கற வரைக்கும் தொட்டதா ரெகார்ட் ஆகாதே! இருந்தாலும் தொழில் நுட்பத்தை எல்லாம் பயன்படுத்தி தேய்க்கிறதாலேயே டைப் செய்ய ஒரு ஆப் தயாரிச்சாங்க.
ஸ்விப்ட் ன்னு ஒரு டைப்பிங் ஆப். அது இந்த மாதிரிதான். காசு கொடுத்து வாங்கணும். நமக்குத்தான் காசு கொடுக்கறதுன்னாலே அலர்ஜி ஆச்சே! (ம்ம்ம்ம் ப்ளே ஸ்டோர்லேயே 58 ரூபாய்க்கு கிடைக்குது. வாங்கறவங்க வாங்கிக்கலாம்! :)
கவலைப்பட வேண்டாம். ஆண்ட்ராய்ட் மக்களே இப்ப ஒரு ப்ரெடிக்டிவ் இன்புட் வெளியிட்டுட்டாங்க. இப்ப தாங்க் யூ ன்னு எழுதனும்ன்னா … ஆங்கிலத்துலதான்... டிய முதல்ல தொட்டு விரலை அப்படியே ஹெச் க்கு இழுத்து போகணும். அடுத்து ஏ க்கு இழுத்துப்போகணும். இப்படியே தொடர்ந்து என், கே. ஆனா உண்மையில டி ஹெச் ஏ வரை இழுத்ததுமே thank ன்னு ப்ரெடிக்ஷன்ல தெரியும். அதாவது கீபோர்ட் க்கு மேலே தெரியும் ஒரு சிறு பட்டைல வார்த்தைகள் தோன்றும். அதை தொட என்டர் ஆயிடும். அப்படி ஆன கையோட அடுத்து என்ன வார்த்தை வரும்ன்னு ஒரு கெஸ் அடிக்கும். god, you, goodness ன்னு மூணு வார்த்தைகள் தோன்றும். இதுல ஒண்ணுதான் நமக்கு வேணும்ன்னா அதை தொட என்டர் ஆகும். அடுத்த பரிந்துரை வரும். இப்படி வரது நமக்குத்தேவை இல்லைன்னா ஒண்ணும் பிரச்சினை இல்லை. நாம பாட்டுக்கு அடுத்த வார்த்தைக்கு தொட்டு இழுக்க ஆரம்பிக்கலாம். thank ல நான் கரெக்டா ஏ வரை விரலை கொண்டு போகலையேன்னா, பரவாயில்லை. அது டிக்ஷ்னரிய பாத்து ths ன்னு ஒன்னும் வார்த்தை இல்லை, இவன் tha அடிக்கத்தான் பாத்து இருக்கணும்ன்னு கெஸ் பண்ணி அப்படியே காட்டும்! ஸ்மார்ட்!
இங்கே தரவிறக்க அது அனுமதிக்குதான்னு பாருங்க. http://tinyurl.com/m9mfnz3
சில ஸ்க்ரீன் ஷாட்ஸ் லிங்க்ஸ் இங்கே
இங்கே கிடைக்குது. உங்க ரிஸ்க்! http://www.mirrorcreator.com/files/01V0MZEP/
ஸ்க்ரீன் ஷாட்களையும் அந்த பக்கத்தில பார்க்கலாம்.
ஆரம்பத்தில கொஞ்சம் கஷ்டமா தோணினாலும் சுலபமாவே பழகிடலாம். பயன்படுத்திப்பாருங்க. Android keyboard. இது அடுத்த நெக்சஸ் வெர்சனுக்கான வெளியீடுன்னாலும் என்னோட Xolo Q800 ஆண்ட்ராய்ட் வெர்சன் 4.1.2 ல அருமையா வேலை செய்யுது.

இதே மாதிரி அடுத்த நெக்சஸ் வெர்ஷனுக்கான காமரா அப்ளிகேஷன். இப்ப இருக்கறதே போதும்ன்னு நினைச்சா, சரி. இல்லை கொஞ்சம் கூடுதலா வசதி இருந்தா பரவாயில்லைன்னு நினைச்சா அடுத்த ஆப் ஐ பார்க்கலாம்.ஏற்கெனவே இருக்கற காமராதான். சில கூடுதல் வசதி, சில மாற்று செட்டிங் டிஸ்ப்லே. பனோரமா ஷாட் எடுக்க வசதி, இப்படி சிலது புதுசா. தொ.நு ஆர்வம் இருக்கறவங்க முயற்சி செய்யலாம்.
வரட்டா?
ஸ்க்ரீன்ஷாட் எல்லாம் பாருங்க.







Tuesday, May 21, 2013

கூகுள் ப்ளஸ் குறிப்புகள்


கூகுள் ப்ளஸ் குறிப்புகள்:

Keyboard Shortcuts.
உங்கள் ஓஎஸ் மற்றும் உலாவி பொறுத்து இது வேலை செய்யலாம்; செய்யாமல் இருக்கலாம். (என்ன வானிலை அறிக்கை மாதிரி இருக்கா? ட்ரை பண்ணி பாருங்க!)
சீக்கிரம் நேவிகேட் செய்ய பயனாகும்:
      ஸ்க்ரால் டவுன் செய்ய - ஸ்பேஸ்பார்
      மேலே ஸ்க்ரால் செய்து போக - ஆல்ட் + ஸ்பேஸ்பார்
      அடுத்த இடுகை J
      முந்தைய இடுகை K
      பின்னூட்டம் ஆரம்பிக்க என்டர்
     பின்னூட்டம் முடிக்க ஆல்ட் என்டர்

நாட்டிபிகேஷன் -
       பப்ளிக் - யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
        எக்ஸ்டெண்டட் சர்கிள் - உங்கள் வட்டங்களில் உள்ள எல்லாரும் + அவர்களது வட்டங்களில் உள்ள எல்லாரும்.
        குறிப்பிட்ட சர்கிள் - அதில் உள்ளவர் மட்டும் (ஒன்றுக்கு மேற்பட்ட சர்கிள்களை தேர்ந்தெடுக்கலாம்.)
        நண்பர் மட்டும் - + இட்டு, இடைவெளி இல்லாமல் அவரது கூகுள் பெயரை இடவும்.
        ஈமெய்ல் - 100 மெய்ல் ஐடி வரை சர்கிள்ள இருக்கிறவங்களுக்கு நேரடியாக அனுப்பலாம்.

Post Style Options
தடிமனான எழுத்துகள்ளுக்கு இடைவெளி இல்லாமல் ஸ்டாரை * இடவும். *இது போல*
சாய் எழுத்துக்களுக்கு இடைவெளி இல்லாமல் அன்டர் ஸ்கோர் _ இடவும். _இது போல_
அடித்த எழுத்துக்களுக்கு இடைவெளி இல்லாமல் கோடு - இடவும். -இது போல-

hashtags கவனத்தை ஈர்க்க. 
 உதாரணமாக ...
      கூடுதலாக உணர்ச்சிகளை காட்ட # ரொம்ப பிடிச்சது!
      வகைப்படுத்த #அரசியல்
       ஒரு குழுவின் கவனத்துக்கு # தீனிதின்னி க்ரூப்

Monday, May 6, 2013

அண்ராய்ட் ஆப்ஸ்


keywords: android, apps, jelly beans

அண்ராய்ட் ஆப்ஸ் பத்தி திருப்பியும் ஒரு பதிவு.
அண்ட்ராய்ட் ல டைப் செய்யறதைப்பத்தி பேசறப்ப கஷ்டமா இருந்தா 90 டிகிரி திருப்பி வெச்சுக்குங்க; நீள வாட்டில விசைப்பலகை திரும்பி நிக்கும்ன்னு - இது போல - எழுதிய நினைவு. இந்த ஓரியண்டேஷன் போர்ட்ரெய்ட், லாண்ட்ஸ்கேப் ன்னு இரண்டு வகை. சாதாரணமா போனை நாம பிடிக்கிறது அகலம் கிடைமட்டமாகவும் நீளம் செங்குத்தாகவும்- போர்ட்ரெய்ட் - ஆளை படம் பிடிக்க இப்படித்தானே வைப்போம்? 90 டிகிரி சுழட்டி அகலத்தை செங்குத்தா பிடிக்கறது லாண்ட்ஸ்கேப். கடற்கரை மாதிரி இடங்களை படமெடுக்க பயன்படுத்துவோம். போனை நிலை மாத்தறப்ப இது போல ஓரியண்டேஷனை திருப்பறது அண்ட்ராய்டோட பாராட்டத்தக்க ஒரு குணம்.

ஆனா இதுவே சில சமயம் பிரச்சினையையும் எரிச்சலையும் உண்டு பண்ணலாம். உதாரணமா படுத்துகிட்டு ஒரு கதை படிச்சுகிட்டு இருக்கோம். கூல் ரீடர்ல ஈபப் பார்மேட்ல கூலா படிச்சுகிட்டு இருக்கும் போது புரண்டு படுக்கிறோம். ஓரியண்டேஷன் மாறிடும்!
இதே போல இன்னும் சில நேரங்களில இந்த ஓரியண்டேஷன் மாறாம இருந்தா நல்லதேன்னு நினைப்போம்!

இதற்கான ஆப் அடாப்டிவ் ரொடேஷன் லாக். (adaptive rotation lock). வழக்கம் போல கூகுள் ப்ளே ஸ்டோர்லேந்து இதை ( http://tinyurl.com/bme79p7 ) தரவிறக்கி நிறுவின பிறகு அதை நமக்கு தோதா அமைச்சுக்கலாம். நல்ல தேர்வு அடாப்டிவ் லாக். இது போனை திசை திருப்பினா உடனே ஓரியண்டேஷனை மாற விடாம என்ன செய்யணும்ன்னு நம்ம கேட்கும். ஒரு ட்ரான்ஸ்பரன்ட் ஐகான் திரையில சில வினாடிகள் தோன்றும். அதை தொட்டா மாத்தவிடும். இல்லாட்டா மாத்தவிடாது; பழைய ஓரியண்டேஷனிலேயே இருக்க வைக்கும்.

மத்த தேர்வுகளை பாத்து அது நல்லதுன்னு தோனின்னா அதையே அமைச்சுக்குங்க. அடிக்கடி ஓரியண்டேஷன் மாறினா அது சிஸ்டமுக்கு ஸ்ட்ரெய்ன்; பேட்டரிக்கு ட்ரெய்ன்!

 எப்பவுமே போர்ட்ரெய்ட், எப்பவுமே லாண்ட்ஸ்கேப், இதுல இட வலம் மாத்தின்னு பல தேர்வுகள் இருக்கு.
ஹாப்பி பெட் ரீடிங்க்! வரட்டா?

Tuesday, April 9, 2013

அன்ட்ராயர் - இன்னொரு கொசுறு!


key words: android jelly bean copy paste tamil
----------------

ஹும்! இவ்வளோ சீக்கிரம் அடுத்த பதிவு போடுவேன்னு நினைக்கலை.
தம்பி பல்லாஜி அன்ட்ராயர் வாங்கினா ஊஸ் பண்ணனும் அக்கு வேறா ஆணி வேறன்னு ஆராயக்கூடாதுன்னு சொன்ன அறிவுரையை சிர மேற்கொண்டு தமிழ்ல டைப் பண்ணி காபி பேஸ்ட் செய்யப்பாத்தா...... ஆப்ஷன் எங்கேப்பா? என்ன செய்தும் காணலை.
சரி கூகுள் தேவதையை கேட்டா.... ஹிஹிஹி அதான் எல்லாருமே செய்வாங்களே, நீ பதிவு வேற போடணுமா ன்னு கேட்கறீங்களா? இருக்கட்டும்.... விஷயம் புரிஞ்சது.
முன்னமேயே சொன்னேன், கணினில ரைட் க்ளிக் மாதிரி இங்கே கொஞ்சம் அதிக நேரம் தொட்டா வேற கன்டெக்சுவல் ஆப்ஷன்ஸ் கிடைக்கும்ன்னு.... திரையில ஒரு உரையை பாத்தா அதை காபி செய்ய, அதை கொஞ்சம் அதிக நேரம் தொடுங்க. ரெண்டு ப்ராக்கெட் தோன்றி சொல்லை அணைச்சுக்கும்.  

 

இதுகளை இன்னும் அதிக உரையை சேர்த்துக்க இழுக்க முடியும். இடது பக்கம் இருக்கறதை மேலேயும் கொண்டு போகலாம். வலது பக்கம் இருக்கறதை கீழேயும் கொண்டு போகலாம். உரையை தேர்ந்தெடுத்தாச்சா! இப்ப அதை கொஞ்சம் அதி.நே.தொ. அதாங்க அதிக நேரம் தொடுங்க! அது செலக்ட் ஆயிடும். அதுக்கு ஒரு பாப் அப் அல்லது ஏதேனும் ஒரு இடத்தில அறிவிப்பும் கிடைக்கும். இப்ப ஒட்ட வேண்டிய இடத்தில தொடுங்க. பேஸ்ட் ஆப்ஷன் முன்ன போலவே கிடைக்கும். அதை தொட்டா வேலை முடிஞ்சது!

இவ்வளோ சுலபமா? ஏன் உனக்கு முதல்லேயே முடியலைன்னு கேட்கறீங்களா?
ஹிஹிஹி!

Saturday, April 6, 2013

அன்ட்ராயர் -அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது!

சில குறிப்புகள்:
இதுதான் ஆன்ட்ராய்ட் பத்தின கடைசி பதிவுன்னு நினைக்கிறேன். விட்டுப்போன சில விஷயங்கள் (ஓ, அது நிறைய இருக்கு; இங்க எழுதணும்ன்னு நினைச்சு விட்டுப்போன விஷயங்கள்) சில டிப்ஸ்...

சாதாரணமா அன்ட்ராய்ட் கைபேசி வாங்கறவங்க கூட வாங்கக்கூடிய விஷயங்கள் ரெண்டு. ஒண்ணு ஸ்க்ராட்ச் கார்ட். அதாவது ஸ்க்ரீனுக்கு ஒரு பாலிமர் மேலொட்டி. க்ளாஸ்ல ஸ்க்ராட்ச் ஆகாம தடுக்குதாம். அதாவது த்யாகம் பண்ணி ஸ்க்ராட்சை தான் ஏத்துகிட்டு …. கொஞ்ச நாள்ள - என் பையரோட ஆண்ட்ராய்ட்ல அப்படித்தான் இருக்கு - ஸ்க்ராட்ச் கார்ட்லேயே நிறைய கீறல்கள் விழுந்து அன்சகிக்கபிளா இருக்கும்! எப்ப இப்படி ஆகிறதோ அப்ப அதை - ஸ்க்ராட்ச் கார்டை மாத்தணும்ன்னு பேர். ஆனா இப்படி நடக்குமா என்கிறது சந்தேகமா இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா ஸ்க்ராட்ச் விழுகிறதாலே பழகிப்போயிடும். யாரும் சொன்னாத்தான் ஸ்க்ராட்ச் அதிகமா இருக்குன்னு தெரியும்! பார்வை கொஞ்சம் கொஞ்சமா மோசமாகி ஒரு நாள் திடீர்ன்னு "அட! சாளேஸ்வரம் வந்துடுத்து" என்கிற மாதிரி!
இப்படி ஆகாமல் பார்த்து பார்த்து அதை மாற்றிவிடுவது நல்லது. அல்லது வாங்கறப்பவே கொரில்லா க்ளாஸ் ஸ்க்ரீனா பாத்து வாங்கிக்கலாம். கொரில்லா க்ளாஸ்? விக்கில தேடிப்பாருங்க. சுவையான சமாசாரம். ஏறத்தாழ ஸ்க்ராட்ச் ஃப்ரூப் ன்னு வெச்சுக்கோங்களேன்.
ரைட். அடுத்து கைப்பேசியை வைக்க ஒரு நல்ல பௌச். கடையில கேட்டா எக்கச்சக்க விலை சொல்லுவாங்க. வேறு ஏதும் சின்ன கடையா பார்த்து வாங்குங்க. சூடு வெளியேற காத்தோட்டம் இருக்கணும். அழைப்பு வரும்போது காதில ஒலி விழணும். சுலபமா திறக்க முடியணும். அவ்வளோதான்.

பேசிக் பங்க்ஷன்னே நினைக்கிறேன். பாட்டு கேட்க இருக்கும் ம்யூசிக் ஆப் இல் இத்தனை நேரம் கழிச்சு ஆப் பண்ணிடுன்னு செட் செய்ய முடியும். தூங்கப்போகிறப்ப ஏதேனும் நல்ல இசை, தோத்திரம் ன்னு கேட்டுகிட்டு தூங்க நினைக்கிறவங்களுக்கு மிகவும் பயனுள்ளது. சும்மா ஒரு மந்திரத்தையே திருப்பித் திருப்பி கேட்கவும் லூப் செய்ய முடியும். இப்ப ஜம்ன்னு மெலிசா ஒலியை அமைச்சுட்டு கேட்டுகிட்டே தூங்கலாம். போனையே இத்தனை மணிக்கு ஆன் பண்ணு ஆஃப் பண்ணுன்னு செட் செய்ய முடியும்ன்னு முன்னேயே சொன்னேன் இல்லே? சொன்னேன். ரைட்!
கணினில ஏதாவது ஒரு சமயம் செஞ்சுகிட்டு இருக்கிற வேலையில ஏதானும் ஒரு ஆப்ஷன் வேணும்ன்னு நினைச்சா அதை எங்கே போய் தேடுவோம்? அஞ்சு செகண்டுக்குள்ள பதில் சொல்லுங்க. 1....2.....3.....4......5 போச் டைம் ஆயிடுத்து! போனாப்போறது நானே சொல்லறேன். வேலை களத்திலேயே ரைட் க்ளிக் செய்து பார்க்கணும். அதே போல இங்கே ஆண்ட்ராய்டிலேயும் …. திரையை சும்மா லேசா தொட்டும் தொடாமலும்ன்னு வழக்கம் போல செய்யாம, 3 செகண்டுக்கும் மேலே தொட்டுகிட்டு இருங்க. ஆப்ஷன் ஏதாவது வரும். அதே போல மூணு கிடைமட்ட கோடுகளை பார்த்தாலும் - ஒரு ஐகான், அல்லது நிலையான இடத்தில சித்திரம்..... அங்கே ஆப்ஷன்ஸ் இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கலாம். உதாரணமா திரையை தொட்டுக்கிட்டே இருக்க திரை பின் புலத்து படத்தை மாத்த ஆப்ஷன் வரும்!
நிறைய ஆப்ஸ் எல்லாம் தேவையில்லாம நிறுவ வேணாம். 60 லட்சம் ஆப்ஸ் இருக்க் என்கிறதுக்காக நாம் நிறுவணும்ன்னு ஒண்ணும் கட்டாயமில்லை!
அடிப்படையில இது லீனக்ஸ் ஓஎஸ் என்கிறதால விண்டோஸ் மாதிரி ஆன்டி வைரஸ் இல்லாம நெட் கனென்க்ஷனே கூடாது என்கிறது இல்லை. இருந்தாலும் மேய்கிற தளங்களுக்கு தக்க படி இதில முடிவெடுக்கலாம். அதே போல பேங்க் ட்ரான்ஸ்சாக்ஷன் போன்ற விஷயங்களை செய்வதா இருந்தாலும் செக்யூரிட்டி பத்தி யோசிக்கலாம்.
சாதாரணமா தேவையில்லை.
லீனக்ஸ்லேயே நிறுவல் முடிஞ்ச பிறகு சாதாரணமா விஷயம் தெரியாதவங்களை ஓரளவுக்கு மேலே சிஸ்டத்தை மாத்த விடாது. விஷயம் தெரிஞ்சவங்கதான் ரூட் பாஸ்வேர்ட் கொடுத்து மாத்தலாம். அதே போலத்தான் இங்கேயும். சாதாரண யூசர் விஷயம் தெரியாதவங்கன்னு அஸ்யூம் பண்ணிகிட்டு ரூட் செய்வதை கொஞ்சம் கஷ்டமா ஆக்கி இருக்காங்க. ரூட் செய்தா வாரண்டி போயிடும். இதுக்காகவே ரூட் செய்யாம இருக்கறது நல்லது.
சீப்பா இருக்கிற நெட் ப்ளானை யோசிச்சு வாங்கலாம். ஏன்னா அதுதான் ஆண்ட்ராய்டோட உயிர்நாடி.
இன்னைக்கு புத்தம் புதுசா இருக்கிற போன் ஆறு மாசத்துல அரத பழசா ஆயிடலாம்! (சரி சரி, கொஞ்சம் அதிக ஹைப்தான்) அதுக்கு மனசளவில தயாரா இருக்கணும். இருந்தாலும் அடிப்படை சேவைகள் மாறாது. நெக்சஸ் போன்னா அப்டேட் கிடைச்சுட்டே இருக்கும்ன்னு நினைக்கிறேன். கம்பனிகாரங்க வழக்கமா அவங்களோட ஹார்ட்வேருக்கு தகுந்தபடி கொஞ்சம் மாத்தி கஸ்டம் ரோம் போட்டு கஷ்டம் கொடுப்பாங்க. இவங்க அடுத்த வெர்சன் வந்தா அப்டேட் கொடுப்பாங்கன்னு சொல்ல முடியாது. பெர்ர்ரிய கம்பனிகளே அப்படி கொடுக்கிறதா தெரியலை! 15 மாசத்துக்காவது அப்க்ரேட் கொடுக்கணும்ன்னு ஒரு சட்ட திட்டமெல்லாம் வந்து அப்படியே காணாம போயிடுச்சாம்! அப்பதானே அடுத்தது வாங்குவாங்கன்னு ஒரு ஆர்க்யூமென்ட் இருக்கு.
பாத்து கவனமா கையாண்டா உங்க ஆண்ட்ராய்ட் கைபேசி அதிக நாள் உழைக்கும்! வாழ்த்துகள்!

Friday, April 5, 2013

அன்ட்ராயர் - 11 இணைப்புகள்


இப்ப இந்த அன்ட்ராயர் கைப்பேசியோட இணைப்புகளை பார்க்கலாம்.

முதல் இணைப்பு சிம் கார்ட் மூலமா டெலிபோன் கம்பெனியோட இணைப்பு. அது என்ன ப்ளான் என்கிறதைப்பொறுத்து போன் வசதி, மெசேஜ் வசதி, இணைய வசதி இருக்கும். ஒரு 3 ஜி ப்ளான் இருந்தா எல்லாத்துக்கு நல்லா இருக்கும். பல வலைத்தளங்களும் கைபேசிக்காகவே தன் இணைய தளங்களை வடிவமைக்கறாங்க. சட்ன்னு கனென்க்ட் ஆகணுமில்ல!

இரண்டாவது ப்ளூடூத். இது வழியா நாம் ஹெட்போன்ஸ், பெரிய விசைப்பலகை போல பல ப்ளூடூத் சாதனங்களை இணைச்சுக்கலாம். கைய ஃப்ரீயா வெச்சுகிட்டு ஹெட்போன்ல பேசிக்கிட்டே காரியம் செய்யலாம். ஆன் - ஆஃப் ஹெட்போன்ஸ்ஸாலேயே செய்யலாம்!

மூணாவது வைஃபை. வைஃபை சாதங்களை இணைக்கலாம். வயர்லெஸ் மோடம் வீட்டுல இருந்தா இணையத்தையும் இணைச்சுக்கலாம்

நாலாவது ஹெட்போன்ஸ் இணைக்க. 3.5 எம்.எம் ஜாக் இருந்தா நல்லா இருக்கும்!
கடைசியா மைக்ரோ யூஎஸ்பி போர்ட். இது வழியா கணினியை கனெக்ட் பண்ணலாம். கணினிக்கும் கைப்பேசிக்கும் இடையே பைல்களை நகர்த்தலாம். கேட்க வேண்டிய ப்ரவசனமோ பாடல்களையோ கைப்பேசிக்கு நகர்த்தலாம். கைப்பேசி காமெரால எடுத்த விடியோக்கள், படங்களை சேமிக்க கணினிக்கு மாத்திக்கலாம்.

இப்ப வர பல கைப்பேசிகள் சார்ஜிங்கே இப்படித்தான் செய்ய வகை செய்திருக்கும். சார்ஜரே ஒரு யூஎஸ்பி போர்ட்டோடத்தான் இருக்கும். அதனால் வீட்டு ஈபி ப்ளக்கில சொருகினாலும் அது யூஎஸ்பி சார்ஜர்தான். சாதாரணமா நாம் கணினில வேலை செய்துகிட்டு இருக்கறப்ப சொருகிவிட்டா அது பாட்டுக்கு சார்ஜ் ஆகும். திடுதிப்புன்னு இந்த யூஎஸ்பி சாதங்களை பிடுங்கக்கூடாதுனு தெரியும் இல்லையா? டாடா சேதமாக வாய்ப்பு இருக்கு. அதனால யூஎஸ்பியை சொருகினாலேயே என் கைப்பேசில இந்த ஆப்ஷன்ஸ் வருது!  



 டாடா இடம் மாத்தணும் எனும்போது இதை மாத்தி ஸ்டோரேஜ் டிவைஸ் ன்னு கொடுக்கணும். அன்மவுண்ட் செய்யாம இதை பிடுங்காதீங்கன்னு எச்சரிக்கை வரும். சரின்னு சொன்ன பிறகு கனென்க்ட் செய்யும். அந்த சமயத்துல கைப்பேசி நினைவகத்தை முழுக்க கணினிக்கு இணைப்பதால பாட்டு கேட்பதோ போட்டோ எடுத்து சேமிப்பதோ முடியாது என்கிறதை நினைவு வெச்சுக்குங்க! டாடா மாத்தின பிறகு திருப்பி இதை சார்ஜ் ஒன்லி ன்னு அமைச்சுட்டா பிரச்சினையே இருக்காது. எப்ப வேணுமானாலும் பிடுங்கலாம்.

Thursday, April 4, 2013

அன்ட்ராயர் - 10 தமிழ் உள்ளீடு


ரைட்! இப்ப தமிழ்ல உள்ளிடுவதை பார்க்கலாம். இவ்வளோ பணம் கொடுத்து ஆன்ட்ராய்ட் கைபேசி வாங்கிட்டு தமிழ்ல ஒரு கமென்ட் போட முடியலைன்னா எப்படி? பல்லாஜி எழுதறா மேரி சென்னை ஸ்லாங் எல்லாம் ஆங்கிலத்துல எழுதினா ருசிக்காது! குறைஞ்சது ஒரு "அவ்வ்வ்வ்!” ன்னு எழுத முடிய வேணாமா?
இதுக்கு ஆப்ஸ்ல ஒண்ணு தேவை. முரசு செல்லினம் அல்லது தமிழாவோட தமிழ் விசை. ரெண்டுமே கூகுள் ப்ளே ல கிடைக்கும். தேடி நிறுவுங்க. Sellinam, அல்லது TamilVisai ன்னு தேடணும். ஆப்ஸை நிறுவின பிறகு language settings போய் செல்லினம்ன்னு தேர்ந்து எடுக்கணும். அதுலேயே வலது பக்கம் கோடு கோடா இருக்கே, அதை தொட செல்லினம் நிரலோட செட்டிங்க் திறக்கும்.


 
தமிழ் 99 அபிஷியல். அது வேணுமா அல்லது ஆங்கில எழுத்தால பொனடிக் முறையில ammaa = அம்மா ன்னு அடிக்கிற முரசு அஞ்சல் வேணுமான்னு முடிவு பண்ணிக்குங்க. இது வரை ஆங்கிலத்திலேயே டைப் அடிச்சு பழகிட்டா இதுவே சுலபம். ஆனா புதுசா கத்துக்கிறோம் அல்லது நிறைய தமிழ்ல டைப் செய்யப்போறோம்ன்னா ஆரம்பத்தில கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் தமிழ் 99 அல்லது வேறு எந்த தமிழ் விசைப்பலகையாவது கத்துக்கறது நல்லது.
வைப்ரேஷன் ஃபீட் பேக் என்கிறது நாம் விசையை தொட்டதும் உணர்கிற சின்ன கிர். கைப்பேசி நாம் தொட்டதை உணர்ந்து கொண்டது; நாம் அடுத்ததுக்கு போகலாம் என்கிறதுக்கு அறிகுறி. இது போறலைன்னா சவுண்ட் ஃபீட் பேக் வெச்சுக்கலாம். ஒவ்வொரு விசையை தொட்டதும் பசக் ன்னு சின்ன ஒலி எழும்பும்! பாப் அப் ஃபீட் பேக் செலக்ட் செய்ய விசையை அழுத்தினதும் அந்த எழுத்து கொஞ்ச நேரம் தோன்றி மறையும். புள்ளி எழுத ரெண்டு முறை ஸ்பேஸை அழுத்தறா மாதிரியும் வெச்சுக்கலாம். கடைசியா கூட இருக்கிற தமிழ் அகராதியிலிருந்து சொல்லையே பரிந்துரையா காட்டும்.

ஒரு சின்ன உரையை எழுதி பார்க்கலாம்.
செட்டிங்க்ல அமைக்காட்டாக்கூட எழுதுவதற்கு ஜோடா டெக்ஸ்ட் எடிட்டர் திறந்து, அதை தொட, வருவதை பாருங்க.
இது ஆங்கிலபலகை. ஸ்பேஸ் பார் ஐ பாருங்க. இங்லீஷ் ன்னு போட்டு இருக்கு. இதை தொட ஆப்ஷன் வரும். இதுல செல்லினம் ன்னு தேர்ந்தெடுத்து பின்னே... சரியா?



இப்ப மு என்கிற எழுத்து கொஞ்சம் சாய்ச்சு வெச்சாப்போல இருக்கா? ரைட் ! இதான் செல்லினம் விசைப்பலகை. இடம் அதிகமில்லை என்கிறதால் விசைகள் 4 வரிகள்தான் இருக்கு.
க்வெர்டி எழுத்துக்களை பலகையில் வரிசையா அடிச்சுப்பார்க்க...
ஒய், யூ எழுத்துக்களை அடுத்தடுத்து அடிக்க அது யூ ஆயிடுத்து!




பக்கத்து பக்கத்து விசைகளை அடிக்கடி தட்டிக்கிட்டு இருக்கோம்ன்னா, ரொம்ப சுலபமா சரியா அடிக்க ஒரு வழி கைப்பேசியை 90 டிகிரி திருப்பி வைக்கிறது.


இப்ப விசைகள் பெரிசாயும், தெளிவாயும் இருக்கிறதை பாருங்க!

அது சரி, 1 2 3 எல்லாம் எங்கே போச்சு?
கீழே 123 ன்னு இருக்கிற விசையை அழுத்த கீழே காட்டியிருக்கிற விசைப்பலகை வரும்.




½ ன்னு போட்டு இருக்கிறது ஒரு விசைப்பலகை. 2/2 இன்னொன்னு, அதிகம் தேவையிராத எண்/எழுத்துக்கள். ஆனா இதில ஸ்மைலி இருக்கு! என்னைப்போல அடிக்கடி ஸ்மைலி போடறவங்களுக்கு உபயோகமா இருக்கும்! :)

½ ல ரூபாய் சிம்பல் இருக்கிறதை கவனியுங்க!
 abc விசையை தட்ட அது abc விசைப்பலகையா ஆயிடும்.
X அடிச்சா க்ஷ் வருது. t அடிச்சா த்; d அடிச்சா ட. மத்தபடி அதிக குழப்பம் வர வாய்ப்பில்லை! ந வுக்கு w; ன் க்கு n; ண் க்கு N; ற வுக்கு R ... தெரிஞ்சதுதானே? இப்படி மேலெழுத்து வர 3 வது வரியில இருக்கிற _ விசையை தட்டணும். அடுத்த எழுத்து மேலெழுத்தா இருக்கும்.
3 ஆவது வரியில பின் நோக்கிய அம்புக்குறி பேக்ஸ்பேஸ் - முந்தைய எழுத்தை அழிக்கும்.
நாலாவது வரியில இருக்கிற மடக்கின அம்புக்குறி என்டர். அடுத்த வரிக்கு போகும்.
ம்ம்ம்ம்? அவ்வளோதான்னு நினைக்கிறேன். வேறு ஏதும் விட்டுப்போயிருந்தா கேளுங்க.


போகிற போக்கில ஜோடா டெக்ஸ்ட் எடிட்டர்ல இருக்கிற சேவ், அன்டூ, ரீடூ, காபி, கட், பேஸ்ட், க்விட் ஆப்ஷனை எல்லாம் பாருங்க!கவுஜ எழுதினா சேமிச்சு வெச்சுக்கலாம்! செல்லினம் கொடுக்கிற சொல் பரிந்துரையும் பாருங்க!
வரட்டா!