நிறுவல் நீக்கம்.
அதாங்க அன் இன்ஸ்டால்! ஒரு மென்பொருளை நிறுவறோம். அப்புறம் அதிலே பிரச்சினை; இல்லை காசு கேக்கிற மென்பொருள் - கொடுக்கிற காசுக்கு இது தகுதி இல்லைன்னு நினைக்கிறோம்; இல்லை சோதனை மென்பொருள் நிறுவிட்டு போதும் ன்னு நினைக்கிறோம். ஏதோ ஒண்ணு. மென்பொருளை நீக்கணும்.
நல்ல மென்பொருளா இருந்தா அதோட கோப்பிலேயே நிறுவல் நீக்கத்துக்கும் வழி - ஒரு லிங்க் கொடுத்து இருப்பாங்க. அதை சொடுக்கினா போதும். நிறுவ ஒரு வழி காட்டி வந்தது போல நிறுவல் நீக்க வழிகாட்டி ஒண்ணு வந்து நிச்சயப்படுத்திக்கொண்டு நீக்கிட்டு போயிடும். சில சமயம் ஃபீட் பேக் கேப்பாங்க; ஏன் நீக்கறீங்க? குறைபாடு ஏதாவது இருக்கான்னு. இஷ்டம் இருந்தா எழுதலாம், இல்லைன்னா வேணாம். மைக்ரோ சாப்ட் இன்ஸ்டாலர் வழியா நிறுவினதை கன்ட்ரோல் பானல் போய் நீக்கலாம்.
இந்த கன்ட்ரோல் பானல் என்கிறது கணினியோட அமைப்புகளை திருத்தி அமைக்க உதவும். ஒவ்வொரு பயன்பாட்டிலேயும் அதோட அமைப்பை திருத்த வழி இருந்தாலும் இங்கே எல்லா திருத்தங்களுக்கும் வழி இருக்கும். கன்ட்ரோல் பானல் போக:
Start➪Control Panel➪Add or Remove Programs.
ஸ்டார்ட் ➪ கன்ட்ரோல் பானல் ➪ ஆட் ஆர் ரிமூவ் ப்ரோக்ராம்ஸ்.
இதிலே வர பட்டியல்ல நாம் நீக்க நினைக்கற மென்பொருள் இருக்கணும். அப்படி இருந்தா அது மேலே சொடுக்க இன்னும் பெரிசா தெரியும். இதில சேஞ்ச், ரிமூவ் ன்னு தேர்வுகள் தெரியும். ரிமூவ் சொடுக்கினா முன் சொன்னது போல வழிகாட்டி திறந்து நிச்சயப்படுத்திக்கொண்டு நீக்கிடும்.
மைக்ரோசாப்ட் ஆபீஸ் போல சிலதில சேஞ்ச் தேர்வு இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்கு இது இல்லை. நிறுவல் நேரத்தில பலரும் எது வேணும்ன்னு யோசிச்சு நிறுவறது இல்லை. அதனால ஒரு வசதி வேணுங்கிறப்ப அது கிடைக்காது. ஆப்ஷன் எல்லாத்திலேயும் போய் பாத்தாலும் கிடைக்காது. ஹெல்ப் ஐ பாத்தா இந்த வசதியை நிறுவலைன்னு தெரியவரும். அது இந்த வழியாத்தான் நிறுவணும். சேஞ்ச் ன்னு இல்லாம ரிபேர் ன்னும் இருக்கலாம். அதை சொடுக்கும்போது நிறுவலுக்கு சிடியை தேடும் என்கிறதை நினைவு வெச்சுக்குங்க! திருப்பி நிறுவல் வழிகாட்டி துவங்கும். நமக்கு தேவையானதை நிறுவி தேவை இல்லாததை நீக்கலாம்.
விண்டோஸ் நிறுவல் போதே சில தேர்வுகள் இருக்கு. யாரும் அத கவனிச்சு நிறுவறது இல்லை! சாதாரணமா ரெண்டு நிரல் தவிர மீதியை நிறுவிடுவோம். விட்டுபோறது ஒண்ணு ஃபேக்ஸ் வசதி. ம்ம்ம்ம் என்னது! ஆமாம். ஃபேக்ஸ். யாரும் இத பயன்படுத்தறதா தெரியலை. இருக்கிறது ஒரு மோடம்; அது இன்டர்நெட்ல இருக்கும்.
இரண்டாவது தானியங்கி பேக் அப் வசதி. நிறைய கோப்புகளை உருவாக்கி கட்டாயமா பாதுகாக்க வேண்டிய நிலையில இருக்கிறவங்க இதை நிறுவிக்கலாம். ஆட் ரிமூவ் பக்கத்திலேயே அடுத்த டேப் ல இருக்கு பாருங்க! சிடியை தயாரா வெச்சுக்கவும்.
நீங்க சொல்லற வழியெல்லாம் பாத்தாச்சு. நிறுவலை நீக்க முடியலைன்னு சொல்லறீங்களா? பாவம்.... நீங்க நிறுவி இருக்கிறது நல்ல மென்பொருள் இல்லே! இத ஸ்கம்வேர் ன்னு சொல்வாங்க.
(மென்பொருள் எல்லாம் சுலபமா நிறுவலாம், மைக்ரோசாப்ட்டுது தவிர ன்னு எழுதணும் போல இருக்கு! எப்படி இருக்குன்னு பார்க்க இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் 9 பீட்டா நிறுவப்பாத்தேன். மாட்டேங்குது. ஏதோ அப்டேட் இல்லையாம். சோதிச்சு பாத்தா எல்லாம் அப்டேட்டாதான் இருக்கு! ஹும்! சரி பீட்டா, மன்னிச்சுடுவோம்!)
Wednesday, January 12, 2011
Thursday, January 6, 2011
மென்பொருள் நிறுவல்....
சரி, இணையத்துக்கு திரும்பலாம். நிறைய இலவச மென்பொருட்கள் இங்கே கொட்டிக்கிடக்கு. ஒண்ணு ரெண்டு தரவிறக்கி எப்படி நிறுவறதுன்னு பார்க்கலாம். பல எச்சரிக்கைகளை முன்னேயே சொல்லி இருக்கேன். முதல்லே ஆன்டி வைரஸ் ஐ அப்டேட் செய்துக்கணும். மென்பொருளை நம்பத்தகுந்த தளத்திலேந்து தரவிறக்கணும். தரவிறக்கின உடனே வைரஸ் இருக்கான்னு சோதிக்கணும். அப்புறமா நிறுவணும். சில தரவிறக்க மென்பொருட்கள் இதை தானியங்கியாவே செய்யும்.
சிலது ஸ்டாண்ட் அலோன் அப்ளிகேஷன் என்பாங்க. இதுக்கு நிறுவல் எல்லாம் ஒண்ணும் வேணாம். அது இயங்க தேவையான நூலகங்கள் அதிலேயே இருக்கு. நூலகங்கள்? இதென்னப்பா, மென் பொருள இயக்க லைப்ரரி எதுக்கு?
ம்ம்ம்ம்ம்ம்.... இப்படி யோசிச்சு பாருங்க.
மென்பொருட்களை நமக்கும் கேகய ராஜாவுக்கும் புரியாத சில பாஷையில எழுதறாங்க. கணினிகிட்டே வரிசையா இதை பண்ணு, அடுத்து இதை பண்ணு ன்னு சொல்லற ரீதியிலே இருக்கும். பல இடங்களில திருப்பி திருப்பி ஒரே மாதிரி இயக்கங்கள் ஒரு தொகுதியா வரும் இல்லையா? அதை ஒரே இடத்திலே போட்டு இங்க போய் என்ன செய்யனும்ன்னு பாத்து செஞ்சுட்டு வா ன்னு சொல்லும். இது ஒரு லைப்ரரிக்கு போய் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை எடுத்து என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுகிட்டு வர மாதிரி. அதான் லைப்ரரி.
எல்லா கட்டளைகளும் அடங்கி நிறுவல் தேவையில்லாதது ஒரு வகைன்னா இன்னொரு வகை, விண்டோஸ்லே இருக்கிற வசதிகள், நூலகங்கள் எல்லாத்தையும் பயன்படுத்தி வேலை செய்யறது. மற்றொரு வகை தேவையான லைப்ரரிகள் எல்லாத்தையும் புதுசா நிறுவறது. இதுக்குள்ளே ரொம்ப போக தேவையில்லை.
மெடாபேட் (metapad) ன்னு ஒரு நல்ல மென்பொருள் தரவிறக்கி இயக்கிப்பாருங்க! இது ஒரு ஸ்டாண்ட் அலோன் அப்ளிகேஷன். தனியாகவே பயன்படுத்தலாம். தரவிறக்கி இரட்டை சொடுக்கு சொடுக்குங்க! நோட்பேட் மாதிரியே திறக்கும். என் லினக்ஸ்லே கூட வைன் உடன் சேர்ந்து வேலை செய்யுது.
உங்க கணினியிலே இருக்கிற நோட்பேடை கண்டு பிடிச்சு அதுக்கு பேரை மாத்தி இதுக்கும் நோட்பாட் ன்னு பேரை மாத்தி அது இருந்த இடத்திலே இதை வெச்சுட்டா இன்னும் சூப்பர். உங்க நோட்பேட் இப்ப அட்டகாசமா வேலை செய்யும்... இன்னும் பல வசதிகளோட!
தரவிறக்கினது googletamilinputsetup.exe ன்னு வெச்சுக்கலாம். செய்ய வேண்டியது எல்லாம் அதை கண்டு பிடிச்சு சொடுக்க வேண்டியதுதான். இது உங்க கணினியை பாதிக்கும், நிச்சயமா நிறுவணுமான்னு விண்டோஸ் கேக்கும். உங்க இஷ்ட தெய்வத்தை வேண்டிகிட்டு யெஸ் ன்னு சொடுக்குங்க. நிறுவி தேவையான கோப்பை எல்லாம் பிரிச்சு வெச்சுகிட்டு எங்க நிறுவ ன்னு கேக்கும். சாதாரணமா அது சொல்கிற இடத்தையே ஒத்துக்கலாம். C\Programs ன்னு சாதாரணமா சொல்லும். C லே இடம் இல்லைன்னு தோணித்துன்னா வேற பகிர்வுலே கூட நிறுவலாம். தப்பில்லை.
இடத்தை காட்டினதும் உன் அப்பா பேரென்ன அம்மா பேரென்னன்னு எல்லாம் கேட்டு - சரி சரி கொஞ்சம் ஓவரா போயிட்டேன் - மேலே தேவையான தகவல்கள் - மல்மேசையிலே ஐகான் வேணுமா, டாஸ்க் பாரிலே ஷார்ட்கட் வேணுமா; எல்லாம் கேட்டுட்டு, அது தப தபன்னு நிறுவிவிட்டு முடிச்சாச்! ன்னு சொல்லும். க்ளோஸ் பொத்தானை அமுக்கி வெளியேற வேண்டியதுதான்.
சில சமயம் நடுவிலே இலவசமா இந்த டூல்பார் நிறுவறேன்; செர்ச் இஞ்ஜின் நிறுவறேன்னு எல்லாம் சொல்லக்கூடும். வாணாம்ன்னு சொல்லுங்க. ஒரு வேளை இன்ஸ்டால் ப்ளா ப்லா ப்ளாஆன்னு சொல்லி பக்கத்திலே ஒரு சின்ன பொட்டி போட்டு அதில் டிக் அடிச்சு இருந்தா அந்த டிக் ஐ சொடுக்கி நீக்குங்க. அப்புறமா நெக்ஸ்ட் சொல்லிக்கலாம். நிறுவிட்டா அப்புறம் அதை நீக்கறது கஷ்டம்!
சிலது மேம்படுத்திய பதிப்பை நிறுவிக்கோயேன். அதுல பலான வசதிகளிருக்குன்னு சொல்லும். சரின்னா அது வலைதளத்துக்கு கொண்டு போய் தரவிறக்கும் முன்னேயோ பின்னேயோ காசு கேட்கும். சிலது இலவசமா ரிஜிஸ்டர் செய்துக்க சொல்லும்.
பயப்படாம செய்து பாருங்க!
Wednesday, January 5, 2011
பெரிய எழுத்து விக்கிரமாதித்யன் கதை.... 2
கன்ட்ரோல் பானல்> டிஸ்ப்லே> அட்வான்ஸ்ட் வழியா போனா கிடைக்கிற சாளரத்திலே ஐடம் ன்னு இருக்கு பாருங்க. அதிலே கீழ் நோக்கிய அம்புக்குறியை சொடுக்கி ஒவ்வொண்ணா தேர்ந்தெடுத்து, அதுக்கு கீழே இருக்கிற பொட்டில எழுத்துரு அளவை மாத்திக்கலாம்.
இங்கே விண்டோஸ் சாளரத்தோட ஒவ்வொரு இடத்திலும் எழுத்து அளவு என்ன இருக்கணும் ன்னு நிர்ணயிக்கலாம். செட்டிங்க்ஸ் இப்படி இருக்கலாம். தேவையானபடி மாத்திக்குங்க.
Format: Item - Size - Font - Font Size
Active Title Bar - 22 - Trebuchet MS - 11
Icon - 32 - Tahoma - 10
Inactive Title Bar - 22 - Trebuchet MS - 11
Menu - 19 - Tahoma - 10
Palette Title - 19 - Tahoma - 9
Selected Items - 19 - Tahoma - 10
ம்ம்ம்ம் .... இங்க பான்ட் அளவை மாத்துங்க. அவ்வளோதான். கணினி முழுக்க இருக்கிற எல்லா எழுத்துக்களும் பெரிசாவே தெரியும். அதுக்குன்னு மானிட்டர் மேலே சாம்சங்க் ன்னு எழுதி இருக்கிறது பெரிசா தெரியலைன்னு புகார் சொல்லக்கூடாது.
இவ்வளவு செஞ்சும் உங்களுக்கு திரையில் இருக்கிறதை சரியா பார்த்து படிக்க முடியலைன்னா விசேஷ உதவி உங்களுக்கு தேவை. இதுக்கு ஆக்ஸ்ஸபிலிடி ஆப்ஷன்ஸ் ன்னு பெயர்.
Start➪Control Panel➪Accessibility Options.
use high contrast ஐ தேர்ந்தெடுங்க. பக்கத்திலே செட்டிங்க்ஸ் சொடுக்கினால் படத்திலே வலது பக்கம் தெரிகிற தேர்வுகளை பார்க்கலாம். ஒவ்வொண்ணா பரிசோதிச்சு எது சரி வருதோ அதை வெச்சுக்கலாம்.
இரண்டாவதா ஒரு சின்ன பூத கண்ணாடி உதவியோட பார்க்கலாம். இல்ல இல்ல, நீங்க கடைக்கு போய் வாங்க வேணாம். எக்ஸ்பி யே ஒண்ணு வெச்சு இருக்கு. start ➪ Programs ➪ accessories ➪ accessibility ➪ Magnifier
திரையின் மேலே ஒரு சென்டிமீட்டர் அளவில ஒரு பட்டை தெரியும். அதுல நம்ம சொடுக்கி எங்கெல்லாம் போகுதோ அந்த இடம் பெரிசா காட்டப்படும். இதை தேவையான படி மாத்திக்கலாம். படத்தை பாருங்க.
பயர்பாக்ஸ் உலாவியிலே நோஸ்கிவின்ட் ன்னு ஒரு நீட்சி இருக்கு. சௌகரியப்படி உரை அளவை மட்டுமோ; உரை படம் அளவுகளையோ, ஒரு குறிப்பிட்ட தளத்துக்கோ, எல்லா தளங்களுக்குமோ அமைச்சுக்கொள்ளலாம். பின்னணி முன்னணி கலரைக்கூட மாத்திக்கலாம்!
இதை எல்லாம் பயன்படுத்தி கணினியை கண் பார்வை குறைந்த பெரியவங்களும் பயன்படுத்த முடியும்.
| From magnification |

இன்னொரு விஷயம் டெஸ்க்டாப் தீம் ஐ மாத்தினா இது காணாம போயிடும். எல்லா டெஸ்க்டாப் தீம் உம் இப்படி பல எழுத்து அளவுகளை அனுமதிக்கும்ன்னு சொல்ல முடியாது.
இவ்வளவு செஞ்சும் உங்களுக்கு திரையில் இருக்கிறதை சரியா பார்த்து படிக்க முடியலைன்னா விசேஷ உதவி உங்களுக்கு தேவை. இதுக்கு ஆக்ஸ்ஸபிலிடி ஆப்ஷன்ஸ் ன்னு பெயர்.
Start➪Control Panel➪Accessibility Options.
use high contrast ஐ தேர்ந்தெடுங்க. பக்கத்திலே செட்டிங்க்ஸ் சொடுக்கினால் படத்திலே வலது பக்கம் தெரிகிற தேர்வுகளை பார்க்கலாம். ஒவ்வொண்ணா பரிசோதிச்சு எது சரி வருதோ அதை வெச்சுக்கலாம்.
| From magnification |
இரண்டாவதா ஒரு சின்ன பூத கண்ணாடி உதவியோட பார்க்கலாம். இல்ல இல்ல, நீங்க கடைக்கு போய் வாங்க வேணாம். எக்ஸ்பி யே ஒண்ணு வெச்சு இருக்கு. start ➪ Programs ➪ accessories ➪ accessibility ➪ Magnifier
| From magnification |
திரையின் மேலே ஒரு சென்டிமீட்டர் அளவில ஒரு பட்டை தெரியும். அதுல நம்ம சொடுக்கி எங்கெல்லாம் போகுதோ அந்த இடம் பெரிசா காட்டப்படும். இதை தேவையான படி மாத்திக்கலாம். படத்தை பாருங்க.
| From magnification |
பயர்பாக்ஸ் உலாவியிலே நோஸ்கிவின்ட் ன்னு ஒரு நீட்சி இருக்கு. சௌகரியப்படி உரை அளவை மட்டுமோ; உரை படம் அளவுகளையோ, ஒரு குறிப்பிட்ட தளத்துக்கோ, எல்லா தளங்களுக்குமோ அமைச்சுக்கொள்ளலாம். பின்னணி முன்னணி கலரைக்கூட மாத்திக்கலாம்!
இதை எல்லாம் பயன்படுத்தி கணினியை கண் பார்வை குறைந்த பெரியவங்களும் பயன்படுத்த முடியும்.
Tuesday, January 4, 2011
பெரிய எழுத்து விக்கிரமாதித்யன் கதை....
ம்ம்ம் ... எல்லாம் நல்லா இருக்கு. ஆனா இந்த திரையைத்தான் சரியா பாக்க முடியலேன்னு புலம்பறவங்களுக்கு இந்த பதிவு. லீகல் டாகுமென்டோட பைன் ப்ரின்ட் எல்லாம் சர்வ சாதாரணமா கண்ணாடி இல்லாம படிச்சது ஒரு காலம். இப்ப கண்ணாடி போட்டும் சரியா தெரியறதில்லை. ம்ம்ம் எல்லாம் காலத்தின் கோலம். போகட்டும். சரியா பாக்க முடியலேன்னு ஒத்துக்கிட்டா பாதி பிரச்சினை சால்வ்ட். எனக்கு வயசாகலைன்னு பிடிவாதம் பிடிக்கிறவங்களுக்குத்தான்.... சரி சரி மேலே படிக்கலாம். எழுத்துக்களையும் மத்தத்தையும் பெரிசா பார்க்க பின் வர செய்தியை பாத்து செய்யுங்க.
ரொம்ப சுலபமா ரெசொலூஷனை குறைச்சா எல்லாமே பெரிசாகிடும். எப்படி செய்யறதுன்னா;
மேல்மேசை மேலே வலது சொடுக்கு > ப்ராபர்டீஸ் > செட்டிங்ஸ்
இங்கே நடுவிலே இடதுபக்கமா ஸ்க்ரீன் ரெசொலூஷன் ன்னு இருக்கு பாருங்க. அதில இருக்கிற பட்டனை பிடிச்சு இடது பக்கமா இழுங்க. என்ன தேர்வு கிடைக்கும் என்கிறது உங்க மானிட்டரை பொருத்தது. அதை இழுத்த பிறகு எப்படி இருக்குன்னு பார்க்க வலது கீழ் கோடியிலே அப்ளை ன்னு இருக்கீற பொத்தானை சொடுக்குங்க. உடனே திரை மாறிடும். இது உங்களுக்கு பிடிச்சா வெச்சுக்குங்க. இல்லைன்னா விடுங்கன்னு சொல்லும். சரியா தோணித்துன்னா யெஸ் பொத்தானை அழுத்த இந்த ரெசொலூஷனை அமைச்சுடும்.
இந்த ரெசொலூஷன் சமாசாரம் சிஆர்டி மானிட்டர்லதான் எதிர்பார்த்தபடி வேலை செய்யும். எல்சிடி மானிட்டர் ன்னா எப்படி தெரியும்ன்னு படத்தில பாருங்க. எழுத்தெல்லாம் கண் அராவியா போயிடும்!
ரெசொலூஷன் அப்படியே இருக்கட்டும். எனக்கு எழுத்து மட்டும் பெரிசா தெரிஞ்சா போதும்ன்னு நினைச்சா:
மேல்மேசை மேலே வலது சொடுக்கு > ப்ராபர்டீஸ் > அப்பியரன்ஸ்> ... இடது பக்கம் கீழே பான்ட் சைஸ் ன்னு இருக்கே அந்த பொட்டியை கீழே இழுத்து லார்ஜர் பான்ட்ஸ் ன்னு தேர்ந்தெடுத்து அப்புறமா அப்ளை பொத்தானை அழுத்துங்க.
இது போதும்ன்னா நல்லது. இல்லை சிலது மட்டுமே மாறுது. மத்த எழுத்தெல்லாம் அப்படியே இருக்குன்னா:
மேலே படத்திலே கீழே வலது பக்கம் தெரிகிற அட்வான்ஸ்ட் அப்பியரன்ஸ் தேர்ந்தெடுங்க.
DPI அளவை அதிக்கப்படுத்தினா எழுத்துக்கள் இன்னும் நல்லா தெரியும்.
எல்சிடி மானிட்டர்ல எழுத்துக்கள் இன்னும் நல்லா தெரிய க்ளியர் டைப்புன்னு ஒரு வசதி இருக்கு. அதையும் வசதியா சரி செஞ்சுக்கலாம்.
Start➪Control Panel➪Appearance and Personalization
இங்கே கீழே அட்ஜஸ்ட் க்ளியர் டைப் செட்டிங்க் ன்னு இருக்கு பாருங்க. அதை சொடுக்குங்க. இப்ப ரெண்டு பொட்டி தெரியுதா?
இதிலே எந்த பொட்டியில எழுத்து நல்லா தெரியுதுன்னு பாத்து அத சொடுக்குங்க. இப்ப திருப்பியும் வேற ரெண்டு பொட்டி தெரியும். இப்படியே 2-3 தரம் செஞ்சா நமக்கு பிடிச்ச மாதிரி எழுத்து தெரியும்.
இது பழைய சிஆர்டி மானிட்டருக்கு பொருந்தாது.

Tuesday, December 21, 2010
டாரண்ட்...
டாரண்ட் லே தரவிறக்கறதைப்பத்தி பாத்தோம்.
இது ரொம்ப நல்ல வசதின்னாலும் பயன் படுத்தறது ஒரு மாதிரி இருக்கு. அது நல்லதா/ கெட்டதா, சரியா/ தப்பா ன்னு அவரவர்தான் முடிவு பண்ணிக்கணும்.
கூகுளாரை டாரன்ட் பத்தி கேட்டா பல தொடுப்புகள் கொடுப்பார். போய் பாத்தா ஆச்சரியமா இருக்கலாம். அங்கே லேட்டட்ஸ்ட் சினிமா படத்துலேந்து கணினி விளையாட்டு, இசை, விடியோ, டிவி நிகழ்ச்சிகள், மென்புத்தகம், படங்கள், காமிக்ஸ் .....மென்பொருள் வரை எல்லாமே கிடைக்கும். காப்புரிமை மீறுவதா ஒரு புகார் எப்பவுமே இருந்துகிட்டு இருக்கு. பதிலுக்கு கேட்கிறாங்க: ஒரு புத்தகம் உங்ககிட்டே இருக்கு. கொஞ்சம் படிச்சுட்டு கொடுக்கிறேன் ன்னு யாரும் கேட்டா கொடுக்கிறோமா இல்லையா? ஒரு சிடி யை பாக்க கேட்க கொடுக்கிறோமா இல்லையா? அது போலத்தான் ஒரு கோப்பை பரிமாறிக்கறோம். இது தனிப்பட்ட நபர் - நபர் பரிவர்த்தனை. இதை கேள்வி கேட்க முடியாது. இது சட்ட விரோதம் இல்லை என்கிறாங்க. பரிமாற்றம் சட்ட விரோதம் இல்லை. ஆனா உடைக்கப்பட்ட மென்பொருட்கள் நிறுவறது சட்ட விரோதம் இல்லையா?
சரி சரி தேடி இறக்கின கோப்பை நிறுவலாமான்னு நீங்க முடிவு பண்ணிக்கோங்க!
இருந்தாலும் இதில சில ஏமாற்றங்கள் இருக்கும்!
லேட்டஸ்ட் படம்ன்னு சொல்லி பழைய படத்தை ஏத்திவிடுவாங்க! கூடவே இலவச இணைப்பா ஒரு வைரஸும் வரும்!
தரவிறக்கினதை எப்பவுமே வைரஸுக்கு சோதிக்காம திறக்காதீங்க! இது பொதுவான விதி! கோப்பை வலது சொடுக்கினா வைரஸ் சோதனைக்கு தேர்வு வரும். சோதிச்சு பார்த்தே திறக்கவும். சோதிச்சு பார்த்தே திறக்கவும். என்ன தப்பா ரெண்டு தரம் எழுதிட்டேன்ன்னு நினைக்கிறீங்களா? :-) இதை எவ்வளோ தரம் சொன்னாலும் போதாது! அதான்!
பின்ன இந்த போலிகளை எப்படி கண்டு பிடிக்கிறது? சாதாரணமா இந்த டாரண்ட் தர எல்லா தளங்களிலுமே தரவிறக்கினவங்க விமரிசனம் செய்ய ஒரு வசதி இருக்கும். அங்கே போய் தரவிறக்கினவங்க என்ன சொல்லறாங்கன்னு பார்க்கணும். நாலஞ்சு பேராவது இது நல்லா இருக்குன்னு சொல்லனும். தரவு ஏத்தினவர் ஒத்தர் நல்ல இருக்குன்னு சொல்லிடுவார். அவரே இன்னொரு ஐடி லேந்து திருப்பியும் நல்லா இருக்குன்னு சொல்லுவாரா இருக்கும்! அதனாலதான் 4-5 பேராவதுன்னு சொன்னேன்!
சில சமயம் தரவிறக்கின பிறகு இதை திறக்க இவ்வளோ டாலர் கொடுத்தா விசை தரேன்ன்னு சொல்லும். சில சமயம் படத்தை பார்க்க இந்த மென்பொருள்தான் தரவிறக்கி பார்க்கணும்ன்னு சொல்லும். இதெல்லாமும் நடக்கும்.
இந்த மாதிரி கோப்புகளெல்லாம் பெரிசு என்கிறதால உங்களுக்கு இலவச நெட் நேரம் கொடுத்து இருந்தா அந்த நேரத்திலே தரவிறக்குங்க. இது கொடுக்கல் வாங்கல் சமாசாரம் என்கிறதால 100 எம்பி தரவிறக்க 200 எம்பி போல நெட் கோட்டா காலி ஆகிடும்ன்னு நினைவு வெச்சுக்கோங்க!
எந்த மென்பொருளை தரவிறக்கணும்னாலும் அந்த மென்பொருளோட மூல தளத்திலேந்தோ (அதாவது அடோபி ப்ளாஷ் அடோபி தளத்திலேந்து மாதிரி) சிநெட் டூகவ்ஸ் மாதிரி தரவிறக்க தளங்களிலேந்தோ தரவிறக்குங்க. அவங்க சோதித்துத்தான் தரவிறக்க தருவாங்க.

Monday, December 20, 2010
வெள்ளம்!
தரவிறக்கத்துல இன்னொரு வகையை பாத்துட்டு மேலே போகலாம்.
ஒரு பெரிய கோப்பு இருக்குன்னு வெச்சுக்குங்க. ம்ம்ம்ம்ம் ஆன்மீகம் பார் டம்மீஸ் புத்தகமா.... ம்ம்ம்ம் ... அது ஒண்ணும் பெரிய கோப்பா இராது...சரி சரி உபுண்டு வட்டு பிம்பம் ன்னு வெச்சுக்கலாம். அது எப்பவும் ஒரு குறுந்தட்டு - சிடி - அளவு - 700 எம்பி இருக்கும். உலகத்திலே 12 மில்லியன் - 1.2 கோடி உபுண்டு பயனர்கள் இருக்காங்களாம். (செக்யூரிடி அப்டேட் எவ்வளோ பேர் தரவு இறக்கறாங்கன்னு பாத்து கண்டு பிடிக்கறாங்களாம்). இவ்வளோ பெரிய கோப்பை ஒரு சேவையகத்திலேந்து (server) இறக்கலாம். ஆனா கஷ்டமா இருக்குமில்லையா? அதனால் நாட்டுக்கு நாடு சேவையகம் வெச்சு இருக்காங்க. இருந்தாலும் 1.2 கோடி ரொம்ப பெரிய நம்பர்.
பின்னே இவ்வளோ பேருக்கு எப்படி வசதி செய்யறது? ஒவ்வொரு ஏப்ரல் மாசமும் அக்டோபர் மாசமும் புதுசா ரிலீஸ் செய்வாங்க. அப்ப தரவிறக்க முழி பிதுங்கிடும் இல்லையா?
இந்த மாதிரி பிரச்சினைக்கு ஒரு வழி கண்டு பிடிச்சு இருக்காங்க. அதன் மூலம் எவ்வளோ பேர் வேணுமானா குறைந்த நேரத்திலே ஒரே சமயம் தரவிறக்கிக்க முடியும். அதுக்கு டாரண்ட் ன்னு பேர். அதை டாரண்ட் ன்னுதான் சொல்லணும்; வெள்ளம்ன்னு சொல்லக்கூடாது!
அது எப்படி வேலை செய்யுதுன்னு பாக்கலாமா?
ம்ம்ம்ம்ம் ஒரு 100 எம்பி கோப்பு இருக்குன்னு வைச்சுக்கலாம். அதை 256KiB துண்டுகளா வெட்டறேன். ஒரு எம்பி க்கு (MB. MP MLA இல்லை!) 4 துண்டு ஆச்சு. அப்ப 100 எம்பி 400 துண்டாச்சு. இப்ப என்ன செய்யறேன், முதல்ல தரவிறக்க வர ஆசாமிக்கு முதல் துண்டை கொடுக்கறேன். அதுக்குள்ள இரண்டாம் ஆசாமி வரார். அவருக்கு முதல் துண்டை தர மாட்டேன். இரண்டாம் துண்டை தருவேன்! மூணாவது ஆசாமிக்கு மூணாவது துண்டு. முதல் ஆசாமி எனக்கு மத்த துண்டுகள் வேணும்ன்னு கேட்டா, ரெண்டாம் துண்டு ரெண்டாம் ஆசாமிகிட்டே, மூணாவது துண்டு மூணாவது ஆசாமிகிட்டே வாங்கிக்குங்கன்னு சொல்லுவேன். அவரும் வாங்கிப்பார். பதிலுக்கு அவங்ககிட்ட இல்லாத முதல் துண்டை தருவார். ரெண்டாம் ஆசாமி ரெண்டாம் துண்டை மத்தவங்களுக்கு கொடுத்துட்டு முதல் மூணாவது துண்டை வாங்கிப்பார். இதே போல மூணாவது ஆசாமி. இப்ப மூணே தரம் நான் துண்டு கொடுத்ததுல மூணு பேருக்கும் மூணும் கிடைச்சாச்சு.
இப்படி சேவையகத்துக்கு வேண்டுதல் வர வர அடுத்த அடுத்த துண்டுதான் கொடுக்கப்படும். 400 பேருக்கு 400 துண்டு கொடுத்த பிறகே திருப்பி முதல் துண்டு கொடுக்கப்படும். துண்டுகளை வாங்கினவங்க அவங்களுக்குள்ள பரிமாற்றம் பண்ணிப்பாங்க. இதே போல எத்தனை துண்டுகள் வேணுமானலும் பரிவர்தனை செஞ்சுக்கலாம்! டாரண்டுக்கான மென்பொருள் இந்த துண்டுகளை எல்லாம் ஒண்ணா சேத்து முழு கோப்பா ஆக்கிடும்!
அது சரி என்ன துண்டு யாருகிட்டே இருக்குன்னு எப்படி தெரியும்?
அதுக்குத்தான் சேவையக வேலை வேணும். ட்ராக்கர் ன்னு இதுக்கு பேரு. நம்மகிட்ட இருக்கிற துண்டுகள் என்ன என்ன மத்தவங்ககிட்ட இருக்கறது என்ன என்னன்னு இது கணக்கு வெச்சுகிட்டே இருக்கும். இன்னார் இன்னார்கிட்ட வாங்கிக்குங்க ன்னு தகவல் கொடுத்துகிட்டே இருக்கும். கோப்போட துண்டுகள் பரவலா இருக்கிறதால் சேவையக பளு இல்லாம ஒத்தர் கணினியிலேந்து ஒத்தர் கணினிக்கு நேரடியா கோப்பு துண்டுகளை பரிமாறிக்கலாம். இதானால் நம்மோட இணைப்பை பொருத்து வெகு சீக்கிரம் கோப்பு மொத்தமும் கிடைச்சுடும்!
மேலே தகவல் அடுத்த பதிவுல.

Wednesday, December 15, 2010
தரவிறக்கம்:
ரைட். இப்ப அடுத்த விஷயம் பார்ப்போம். ஒரு வலைத்தளத்துக்கு போறோம். அங்க நிறைய தொடுப்பு கொடுத்து இந்த மென்பொருளை இலவசமா தரவிறக்கிக்கலாம்ன்னு போட்டு இருக்கு. அட! நல்லதாச்சே! தரவிறக்கலாம்ன்னு பாக்கறீங்க. அதை எப்படி செய்யறது?
தரவிறக்கும் முன்னாடி சில விஷயங்களை கவனிக்கனும். free download ன்னு சொல்லறது பல இடங்களிலே இருக்கும். ஆனா அது உண்மையா இலவசம்தானான்னு பார்கணும். சில இடங்களில மட்டுமே இது free to try ன்னு தெளிவா இருக்கும். அதாவது ஒரு சில -10, 15 - நாட்களுக்கு இலவசமா பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்த அதை காசு கொடுத்து வாங்கணும். இப்படி தர மென்பொருட்களிலே சில சமயம் சில வசதிகளை முடக்கி வைக்கிறதும் உண்டு.
சிலதை தரவிறக்கி நிறுவறப்பத்தான் வண்டவாளம் வெளியாகும். விலாவரியா சமாசாரம் எல்லாம் கேட்டு அப்புறமா ரைட் நிறுவியாச்சு. ஆனா வேலை செய்யணும்ன்னா இங்க போய் ரெஜிஸ்டர் பண்ணு; இவ்வளோ டாலர்தான் ன்னு சொல்லும். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு கர்ஜனை பண்ணி பிரயோசனமில்லை. முன்னேயே கவனமா நிச்சயமா இலவசமான்னு பாத்து இருக்கணும். அதை வேணுமின்னே சின்ன எழுத்துக்களில ஒரு மூலைல போட்டு வெச்சு இருப்பாங்க!
சிலது தொணப்பல் கேஸ்! சின்ன கால்குலேட்டர், டைமர், கடிகாரம் மாதிரியான மென்பொருட்கள் இபப்டி இருக்கலாம். அதை இவ்வளோ நாள் இலவசமா பயன்படுத்தலாம். அப்புறம் காசு கொடுத்து ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் விசை வாங்கணும். இல்லைன்னாலும் தொடர்ந்து வேலை செய்யும். ஆனா படுத்தும். அதாவது வேலை செய்ய ஆரம்பிக்கும் முன்னே ரெஜிஸ்டர் பண்ணுங்களேன் அப்படின்னு செய்தியை காட்டும். இல்லை ரெண்டு கணக்கு போட்டதும் டாட்டா சொல்லிட்டு மூடிக்கும். திருப்பி அதை துவக்கணும். இல்லை தன்னோட இணைய தளத்துக்கு அழைச்சுட்டு போய் காசு கொடுக்க இந்த வசதியை பயன்படுத்துங்கன்னு சொல்லும். காசு கொடுக்கறோமோ இல்லையோ அந்த வலைப்பக்கத்தில இருக்கிற விளம்பரம் மூலமா சம்பாதிச்சுடுவாங்க! இப்படி செயல்படற மென்பொருட்களை Nagware அப்படிம்பாங்க. இன்னும் சிலது adware. அதாவது விளம்பரம் மூலமா சம்பாதிக்கறது. ஒரு தரவிறக்க மென்பொருளை பயன்படுத்தறதா வெச்சுக்கலாம். அதை பயன்படுத்தி தரவிறக்கறப்ப முதல்ல ஒரு விளம்பரத்தை தரவிறக்கும். அது அந்த மென்பொருள் சாளரத்தில காட்டப்படும். அஞ்சு நிமிஷத்தில வேலை முடியலைன்னா இன்னொரு விளம்பரம் தரவிறக்கப்பட்டு காட்டப்படும். இப்படியே அது திறந்து இருக்கிற வரை காட்டிக்கிட்டே இருக்கும்.
ரொம்ப பாப்புலரா இருக்கிற ஜிமெய்ல் ஹாட்மெய்ல் யாஹூ மெய்ல் எல்லாமும் ஒரு விதத்தில ஆட்வேர்தான். அவற்றோட வலைப்பக்கத்தில வலது பக்கம் மேலே கீழேன்னு விளம்பரங்கள் வரதை பாருங்க!
யானை இலவசம்; ஆனா அங்குசமும் கூட வாங்கணும். அது இத்தனை ஆயிரம் ரூபான்னு சொல்கிற மாதிரி, இசை இலவசம்; ஆனா என் மென்பொருள் மட்டுமே அதை இசைக்க முடியும். அதை இவ்வளோ காசு கொடுத்து வாங்கு ன்னு சொல்கிற மாதிரியான தளங்களும் உண்டு.
இன்னும் சில இடங்களிலே ஒரு சாதா சோதா மென்பொருளுக்கு ரெஜிஸ்டர் பண்ணிக்க; அதுவும் இலவசம்தான்னு சொல்லும். சரின்னு ரெஜிஸ்டர் பண்ண போனா பேரு, ஊரு, முகவரி, அஞ்சல் முகவரின்னு சப்ஜாடா நிறைய விசாரிக்கும். என்னன்னா இந்த தகவலை காசு கொடுத்து வாங்க ஆள் இருக்கு. இந்த மாதிரி ரெஜிஸ்டர் பண்ணினா கொடுத்த முகவரிக்கு ஸ்பேம் அஞ்சலா வர ஆரம்பிக்கும். என்ன செய்யறது? கூடிய வரை இந்த மாதிரி எங்கேயும் ரெஜிஸ்டர் செய்யாம திரும்பிடலாம். நிச்சயமா வேற ஆப்ஷன் - தேர்வு மத்த இடங்களிலே இருக்கும். வெகு சில நேரங்களிலேதான் வேற தேர்வு இல்லாம இருக்கும். நான் இதுக்குன்னு ஒரு மின் அஞ்சல் முகவரி வெச்சு இருக்கேன்! அங்கே போய் அஞ்சல் பாக்கிறதே கிடையாது! :-)) ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் போய் எல்லாத்தையும் டெலீட் செய்துடுவேன்!
உலகத்திலே எதுவுமே இலவசம் இல்லைன்னு சொல்கிறதுண்டு. ஆனால் உண்மையிலே நிறையவே இலவசமாக வலையிலே கிடைப்பது உண்டு. லீனக்ஸ் மாதிரி இயங்கு தளமே இலவசமா கிடைக்கிறப்ப மென்பொருட்கள் என்ன? நிறைய மென்பொருள் தொழில் வல்லுனர்கள் அவங்களோட ஓய்வு நேரத்திலே நல்ல மென்பொருட்கள் தயார் பண்ணி வெளியிடறதுண்டு. சிலர் தனக்கு வேண்டியிருக்குன்னு தயார் பண்ணதை யாம் பெற்ற இன்பம் ... ரீதியிலே வெளியிடறதுண்டு.
சரி சரி தரவிறக்கற சமாசாரம் சொல்லுன்னா...
ஒண்ணும் அதிகம் செய்ய வேண்டாம். அவங்க டவுன்லோட் ன்னு கொடுத்து இருக்கிற பொத்தானையோ வார்த்தையையோ சொடுக்கினா பயர்பாக்ஸ்ல இருக்கிற தரவிறக்க மென்பொருள் சேமிக்கவா, இயக்கவா ன்னு துரியோதனன் பாணியிலே கேட்டுட்டு இறக்கி சேமிச்சு வெச்சுடும். இது இப்ப நிறையவே முன்னேறி இருக்கு. முன்னல்லாம் தரவிறக்கம் மெதுவா இருந்தா, சரி அப்புறம் பாத்துக்கலாம்ன்னு மூட முடியாது. உலாவியை மூடிட்டா தரவிறக்கி கொண்டு இருந்ததும் காணாம போயிடும். இப்ப அதை நிறுத்தி பின்னால மீண்டும் ஆரம்பிச்சுக்கலாம். பெரிய கோப்புக்களா தரவிறக்க dTa மாதிரி தரவிறக்க மென்பொருளை பயன்படுத்தறது நல்லது. அது கோப்பை பல பாகங்களா பிரிச்சு ஒரே நேரத்திலே பல துண்டுகளா தரவிறக்கி அப்புறம் ஒண்ணா தைச்சு கொடுத்துடும்.
இன்னும் அட்வான்ஸ்டா வேணும்ன்னா free download manager போல தரவிறக்கி பயன்படுத்துங்க. நிறுவல் பத்தி அப்புறம் சொல்லறேன்.

Subscribe to:
Posts (Atom)