run என்கிறது அடுத்தது. இதை சொடுக்கினா ஒரு பொட்டி வரும். அதில நாம கட்டளையை டைப் பண்ணி "ம்.... ஓடு, இதை செய்" ந்னு விரட்டலாம்! அப்படி எழுதற தொல்லை வேண்டாம்ன்னுதானே விண்டோஸே வந்தது? ஆனாலும் சில கணினி நிபுணர்கள் இதை அடிக்கடி பயன்படுத்துவாங்க.....பழக்கம்! நமக்கும் சில சமயம் பயனாகும். அப்புறமா பார்க்கலாம். அடுத்து ...
help. அஹா! இது ரொம்ப முக்கியமானது. ஆனாலும் பலரும் பயன்படுத்தாதது. என்னன்னா நமக்கு வேண்டிய கணினி சார்ந்த உதவி கணினியிலேயே இருக்கு. விலாவரியா ஒவ்வொரு விஷயமும் எப்படி செய்யுறதுன்னு எழுதி இருக்காங்க. என்ன செய்யறதுன்னு முழிக்கிறப்ப F1 விசையை (இது எங்கே இருக்கு? மேல் வரிசையிலே இரண்டாவது விசை. அது மேலேயே எழுதி இருக்கும் பாருங்க)- அழுத்தினா உதவிக்கான பக்கங்கள் திறக்கும். அப்படித்தான் அனேகமா எல்லா விண்டோஸ் நிரலும் - ப்ரோக்ராமும்- எழுதி இருக்கும். ஆனா யாருமே இதை பயன்படுத்தறதில்லை. யாரையான போன்லேயோ அஞ்சல்லேயோ கூப்புட்டு கேக்றாங்களே ஒழிய இந்த வசதியை பயன்படுத்தறதில்லை. இதை பயன்படுத்த ஆரம்பிச்சுட்டா நாமே நாளைக்கு தொ.தொ.கிழங்களுக்கு கணினின்னு ப்ளாக் எழுதலாம்!
settings இதை சொடுக்கினா இன்னும் மூணு சமாசாரம் தெரியும். கன்ட்ரோல் பானல், ப்ரின்டர், நெட்வெர்க் ந்னு தெரியும். நெட்வெர்க் நம்மளோட வலை இணைப்புக்கானது. நமக்கு அதை அமைச்ச பிறகு இதில அதிகம் வேலை இராது. ப்ரின்டர் இணைச்சு இருந்தா இதன் வழியா நாம் நம்மோட ப்ரின்டர் செட்டிங்க் எல்லாம் பார்த்து தேவையானா, மாதிரி அச்சு ஒரு பேப்பர்ல அடிச்சு பார்க்கலாம். கன்ட்ரோல் பானல் வழியா கணினியோட எல்லா செட்டிங் உம் பாத்து தேவையானா மாத்திக்கலாம்.
documents ஐ சொடுக்கினா சமீபத்திலே நாம திறந்த கோப்புக்கள் எல்லாம் பட்டியலா தெரியும். இங்கிருந்தே அதை நேரடியா திறக்கலாம்.
programs நம்ம கணினியிலே நிறுவி இருக்கிற நிரல்கள் எல்லாமே இங்கே பார்க்கலாம்; திறக்கலாம். உதாரணமா விஎல்சி ப்ளேயர் இயக்கணும்ன்னா இங்கே ஆங்கில அகர வரிசைப்படி இருக்கிற பட்டியல்லே பாத்து சுலபமா அதை கண்டு பிடிச்சு திறந்துக்கலாம்.
ப்ரொக்ராம்ஸ் ஐ சொடுக்கினா பார்க்கிற எல்லாமே ப்ரோக்ராம்ஸ் ஆ இல்லாம ஒரு அடைவா தெரியலாம். உதாரணமா மைக்ரோசாப்ட் ஆபீஸ் ந்னு தெரியும். உள்ளே போய் சொடுக்கினாத்தான் வேர்ட், எக்ஸெல் ந்னு ஒவ்வொண்ணையும் பார்க்கமுடியும். அதே போல வெறும் ஆக்ஸசரீஸ்ந்னு தெரியும். உள்ளே போய் பாத்தாத்தான் அதில விவரங்கள் தெரியும். விண்டோஸ் எக்ஸ்ப்லோரர், நோட்பேட், வேர்ட்பேட், பெய்ன்ட், சவுண்ட் ரெகார்டர், கால்குலேட்டர் ந்னு பல சின்ன நிரல்கள் இதுக்குள்ளேதான் இருக்கு!
நாம் நிறைய வேலை செய்ய ஆரம்பிக்கும் வரை இத்தனையும் தெரியாம இருக்கலாம். பதிலா நோட்பேட் மட்டும் தெரியும்; கூட ஒரு கீழ் நோக்கிய அம்புக்குறியோட ஒரு சின்ன பெட்டி இருக்கும். இந்த அம்புக்குறியை சொடுக்கினா மெனு கீழ் நோக்கி விரியும்.
இன்னும் கணினியிலே இடங்களை பார்க்க வேண்டியிருக்கு. ஆனா நீங்க ஏதாவது வேலை செய்ய துடிக்கிறீங்கன்னு தெரியுது. ரைட், ஒரு சின்ன வேலை செய்யலாம்.
ம்ம்ம்ம்ம் என்ன வேலை செய்யப் போறீங்க?? அப்புறமா வந்து பார்க்கிறேன்.
ReplyDeleteவாங்க வாங்க மெதுவாவே வாங்க! :-))
ReplyDelete