விண்டோஸ் 7 லீனக்ஸ்லேந்து நிறைய காப்பி அடிச்சதாலே இப்ப கொஞ்சம் பரவாயில்லை. நீ யாரு? கடவுச்சொல் என்னன்னு கேக்கும். அதாங்க பாஸ்வேர்ட்! அது இல்லைனா, அமைப்பை பொருத்து ஒரு அதிதியாத்தான் - அதான் கெஸ்ட்- உள்ளே விடும். கணினியை பயன்படுத்தலாம் ஆனா அதில இருக்கிறத எல்லாம் பார்க்கவோ படிக்கவோ முடியாது; புதுசா ஒண்ணும் நிறுவ முடியாது. சுருக்கமா சொன்னா கணினியை பழுதாக்க முடியாது. விண்டோஸ்7 லே கெஸ்ட் செஷன்னு அமைக்கலேனா கணினியை இப்படி பயன்படுத்த முடியாது.
எக்ஸ்பி லே இப்படி முன்னிருப்பா இல்லை. வேணும்னா இப்படி அமைச்சுக்கலாம். யாரும் செய்யறதில்லை.
சரி உங்க பேரை கொடுத்து பாஸ்வேர்டும் கொடுத்து உள்ளே போங்க! யூசர் நேம் :தொ.கி பாஸ்வேர்ட் தொகி ந்னு கொடுத்து உள்ளே போயாச்சா? ஹும்! இந்த மாதிரி யூசர் பேரையும் பாஸ்வேர்டையும் ஒண்ணா வெச்சுக்கக்கூடாது.
யூசர் பேர் என்னவா இருந்தாலும் பாஸ்வேர்ட் அமைக்கறதுல கொஞ்சம் கவனம் வேணும்.
அதில எழுத்து எண்கள் எல்லாம் கலந்து வைக்கறது நல்லது. மறந்து போயிடுமேன்னு நம்ம பேர், பொண்டாட்டி பேர், பேரன் பேர் எல்லாம் வைக்கக்கூடாது. கெமிஸ்ட்ரி பார்முலா மாதிரி வைக்கலாம். சுலபமா நினைவு வெச்சுக்க நம்ம பேரோட பொறந்த வருஷம் அல்லது தேதி வீட்டு நம்பர் ந்னு எதையாவது சேர்க்கணும். எனக்கு தெரிஞ்ச ஒத்தர் msn3215 ந்னு வெச்சு இருந்தார். அவர் இருக்கறது மரியசூசைநகர். சுருக்கமா msn. வீட்டோட பழைய நம்பர் 32 புது நம்பர் 15.
இப்படி நமக்கு மட்டுமே தெரியற விஷயங்களை வெச்சு பாஸ்வேர்ட் வைக்கணும் .
சரி உள்ளே போயாச்சு. அப்புறம்? ஹிஹிஹி. எல்லாருக்கும் உடனேயே வலைக்கு போய் மெய்ல் பார்க்கணும்.
இன்னும் நம்ம மெய்ல் கணக்கே ஆரம்பிக்கலியே?
அதனால மெதுவா நம்ம கண்ணுக்கு தெரியற விஷயங்களை எல்லாம் பாத்து கொண்டு போகலாம்.
லோகல் தாதா அனாமத்து நிலத்தை ஆக்கிரமிக்கற மாதிரி கணினித்திரையை முழுக்க ஆக்கிரமிச்சுகிட்டு இருக்கிறது பச்ச பசேர்ன்னு ஒரு வயல்வெளி! இது பில்கேட்ஸோட வயலான்னு சந்தேகம். எப்படியானாலும் கண்னுக்கு குளிர்ச்சி. இது பிடிக்காதவங்க மாத்தி வெச்சுக்கலாம். எப்படின்னு எல்லாம் அப்புறம் பார்க்கலாம்.
இதுக்கு பணி மேடை ந்னு பேர். ஆங்கிலத்துல டெஸ்க்டாப். இது நமக்கு தெரிஞ்ச எந்த டெஸ்க் மாதிரியும் இல்லையேன்னு நினைக்கவேண்டாம்! :-) ம்ம்ம்ம்ம் இது ஒரு வலைப்பக்கம் மாதிரி. வலைப்பக்கத்திலே ஏதாவது லிங்க் ஐ சொடுக்கினா அங்கே கொண்டு போற மாதிரி இதுவும் கொண்டு போகும். என்ன ஒரே வித்தியாசம் இது கணினிக்குள்ள இருக்கிற இடங்களுக்கு கொண்டு போகும்.
இல்லை, கணினியில் இருக்கிற நிரல்களை இயக்குகிற கட்டளைகளுக்கு கொண்டு போகும்.
hmmm todarungal
ReplyDeleteவிண்டோஸ்7 லே கெஸ்ட் செஷன்னு அமைக்கலேனா கணினியை இப்படி பயன்படுத்த முடியாது.//
ReplyDeleteமுற்றிலும் புதிய செய்தி. ஆனால் எல்லாரும் சொல்றாப்போல் விண்டோஸ் 7 எனக்கு ஒண்ணும் கஷ்டமா இல்லை. இதுக்கு முன்னாலே போட்டிருந்த விண்டோஸ் 7லே ஆப்லைனிலே தமிழ் அடிக்க முடியாமல் இருந்தது. கூகிள் ஐஎம் ஈ போட்டு அடிச்சேன். இப்போ அதுவும் இல்லை. வசதியாவே இருக்கு எக்ஸ்பி ப்ரொபெஷனலை விடவும்.
எந்த விதத்தில் விண்டோஸ் 7 கஷ்டம் கொடுக்கும்னு சொன்னா நல்லா இருக்கும். தெரிஞ்சு வச்சுக்கலாம்.
ReplyDeleteவிண்டோஸ் 7 ல கெஸ்ட் செஷன் உண்டுன்னு அமைக்கலைன்னா பாஸ்வேர்ட் தெரியாத யாரும் அதை பயன்படுத்த முடியாது. அது நல்லதுதான்.
ReplyDeleteகஷ்டம் கொடுக்கும்னு எங்கே எழுதினேன்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!