சரி, இப்ப கணினினா எது முக்கியமோ அதை பார்க்கலாம். தொ.கி யாரு ந்னு யாரும் கேட்டா நாம நம்ம உடம்பை சுட்டிக்காட்டறா மாதிரி கணினின்னா திரையை காட்டினோம். அது இல்லே, வேற எதுன்னா அப்புறம் ஒரு பொட்டியை காட்டுவோம். ஆங்! அதேதான்! இந்த பொட்டிய கணினின்னு சொல்லறதிலே அதிக அர்த்தம் இருக்கு. இதுக்கு கான்சோல்ன்னு பேரு. இதுக்குள்ளேதான் சிபியூ (CPU) இருக்கு. இதுதான் வேண்டிய கணக்கு எல்லாம் போட்டு நாம் செய்ய நினைக்கறதை செய்ய வைக்குது.
இத வெளியிலிருந்து பார்க்கலாம். பொட்டில நம்ம விசிடி ப்ளேயர்ல இருக்கிறா மாதிரி ஒரு பெரிய வாய் இருக்கு பாருங்க. ம்ம்ம்... அதேதான். இதிலேயும் நம்ம விருப்பமான சிடி டிவிடி போட்டு பாட்டு கேக்கலாம்; சினிமா பார்க்கலாம். இது அனேகமா ஒரு டிவிடி சாதனமா இருக்கும். முன்னே சிடி ரோம் ந்னு இருந்தது. அது சிடியை இயக்கி பாட்டு பாடும், சினிமா காட்டுமே தவிர வெத்து சிடி யையோ டிவிடியையோ எழுத முடியாது. இப்பல்லாம் டிவிடி ரைட்டர்தான் வருது. அதுலே சிடி, டிவிடி எழுதலாம், படிக்கலாம்.
எல்லாம் ஒரு காலத்திலே விலை அதிகமா இருந்தது இப்ப சகாய வெலைக்கு கிடைக்குது. விலைவாசி குறையற ஒரே துறை இதுதான்! இப்ப ப்ளூரே என்கிறாங்க. அது விலை அதிகமா இருக்கு. இன்னும் ரெண்டு வருஷம் இருந்தா அதுவும் டிவிடி ரேஞ்சுக்கு வந்துடும். பெரும்பாலான கணினிகளிலே முன் பக்கம் ஒலி வாங்கி, ஒலிபெருக்கிக்கு இணைக்க இடம் தராங்க. ஒரு யூஎஸ்பி போர்டும் இருக்கலாம்.
அப்புறம் என்ன... அட யாரோ ப்ளாப்பின்னு சொல்லறது காதிலே விழுதே! நான் தொ.கி மட்டும்தான் படிக்கிறாங்கன்னு நினைச்சேன். தொ.தொ.கி கூட படிக்கிறாங்க போல இருக்கு! :-))
ஆதி காலத்துல அஞ்சரை இன்ச்சுல தோசை மாதிரி தொள தொளன்னு ஒரு காந்ததட்டு இருக்கும். அதான் முதல்ல ப்ளாப்பி. இதிலே நம் தேவையான தகவலை சேமிச்சு வெச்சு வேற இடம் எடுத்து போய் அங்க இருக்கற கணினில போட்டு பாக்க முடிஞ்சது. அப்புறம் அது சின்னதாகி மூணரை இன்ச் ஆச்சு. அப்புறம் சிடி ராம் எல்லாம் வெகுஜன உபயோகத்துக்கு வந்து யூஎஸ்பி டிரைவ் எல்லாம் வந்த பின்னே இது காணாமலே போச்சு. அதுவும் சிடி ரோம் வாய் மாதிரித்தான் இருக்கும். கொஞ்சம் சின்னதா. என்னோட கணினில இது இப்ப இல்லை.
No comments:
Post a Comment
உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!