ரைட் திருப்பி வந்துட்டீங்க இங்கே ! ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு. முதல் பாடத்தை பாக்கலாமா?
முதல்ல கணினியை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?
எதுக்கு தெரிஞ்சுக்கனும்ன்னு கேட்டா அது நல்ல கேள்விதான். கார் ஓட்டரவங்களுக்கு அதோட என்ஜின் எப்படி வேலை செய்யுதுன்னு தெரிய வேண்டிய அவசியமில்லை. அது போல டைப் அடிக்க தெரிஞ்சவங்களுக்கு கணினி பத்தி ரொம்ப ஒன்னும் தெரிய வேண்டாம். இருந்தாலும் கொஞ்சம் தெரிஞ்சுக்கறது நல்லது.
கணினிய தினமும் பயன்படுத்தறவங்க கூட கணினி எங்கன்னு கேட்டா இதொன்னு திரையை தான் காட்டுவாங்க. :-) அது நாம படிக்க பார்க்க வசதி செய்து இருக்கிற திரைதான். திரை? அதாங்க மானிட்டர். நாம படிச்சப்ப மானிட்டர்னா வாத்தியார் வெளியே போயிருக்கும்போது யார் கலாட்டா செய்யரதுன்னு பாத்து வெச்சு கோள் மூட்டரவர்தான். இப்ப மானிட்டர்னா கணினி மானிட்டர்தான்.
சரி மேலே போகு முன்னே இதப்பத்தி கொஞ்சம் பாத்துட்டு போகலாம்.
முத முத நாம சித்ரஹார் பாத்த டிவி பெட்டி மாதிரி இருக்கிற மானிட்டர் சிஆர்டி மானிட்டர். இதுதான் ரொம்ப நாள் ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்தது. பிரச்சினைகளும் நிறைய இருந்தது. ஆனா கணினில ரிப்பேர் பண்ணக் கூடியது அது ஒண்ணுதான். எல்சிடி மானிட்டர் வந்து பிறகும் கூட அது விலை அதிகமா இருந்ததால சிலர்தான் வாங்க முடிஞ்சது. இப்ப விலை கம்மி ஆகிட்டதாலே யாரும் புதுசா வாங்கறதா இருந்தா எல்சிடி யே வாங்குங்க. கையில கொஞ்சம் பைசா இருந்தா எலீடி யே வாங்கலாம். அது இன்னும் கொஞ்சம் உசந்தது. அது எடுத்துக்கற மின்சாரம் நாப்பது சதவிகிதம் கம்மி. கலரும் இன்னும் நல்லா இருக்கும். கண்ணுக்கும் பாதுகாப்பு அதிகம்; உறுத்தாது. அதிக நேரம் கணினி வேலை செய்யறவங்க நிச்சயம் வாங்கலாம். விலை கொஞ்சம் அதிகம்தான். உதாரணமா 22 இன்ச் டெல் மானிட்டர் விலையை பாருங்க.
Dell G2210 LED Monitor Price in India – Rs. 13,200/- Indian Rupee (INR)
Dell S2209W LCD Monitor Price in India - Rs. 9,500/- Indian Rupee (INR)
டெல் கொஞ்சம் நல்ல கம்பனி என்கிறதால விலை கொஞ்சம் அதிகம். மத்த கம்பனி விலை இன்னும் குறைவா இருக்கலாம்.
அடுத்ததா நமக்கு ரொம்ப பழக்கமானது விசைப்பலகை. அதாங்க கீ போர்டு! ஆஆஆஆஆந்த காலத்திலேந்து இன்னும் பயன்படறது இந்த க்வேர்ட்டி விசைப்பலகை. எந்த மகானுபாவன் கண்டு பிடிச்சதோ! தொ.கி ஆன நமக்கெல்லாம் இது பழக்கமாயிட்டதாலே சுலபமா பயன்படுத்தலாம். பழைய ரெமிங்டன் மெசினை பட படன்னு தட்டி பழக்கமானவங்க அதுக்கு தகுந்தாப்போலே வாங்கிக்கலாம். மெதுவா டச் டைப் செய்யறவங்க அதுக்குத் தகுந்தாப் போல வாங்கிக்கலாம்.
வாங்கும் போது சொல்லி கேட்டு வாங்குங்க. பல வகைகள் வந்துட்டாலும் அடிப்படையில மெம்ப்ரேன் வகை, தனி விசை வகை ன்னு ரெண்டு வகை. தனி விசை வகைன்னா ஒரு விசை வேலை செய்யலைன்னா மாத்தலாம். மெம்ப்ரேன் வகைல அப்படி செய்ய முடியாது. ஓரங்கட்ட வேண்டியதுதான். இன்னும் வயர்லஸ் /வயர்ட், பிஎஸ்/2 /யுபீஎஸ், இன்டர்நெட், மல்டி மீடியா ன்னு பல வகைகள்.
சாதாரணமா 110 விசைகள் இருக்கும். நம்ம ரெமிங்க்டன்ல எவ்வளோ? ஏன் அதிகம்ன்னு அப்புறம் பாக்கலாம்.
mmmm aduthu kathiruken. konjam slowa poringalo?? he he he ennai mathiri advanced peoplekku slowa theriyuthe?? :P
ReplyDeleteவந்துட்டேன் .. நானும் கத்துக்கறேன்
ReplyDeletekonjam slowa poringalo?? he he he ennai mathiri advanced peoplekku slowa theriyuthe?? :P //
ReplyDeleteநாங்கள்லாம் தொ.கி தானே! வி ஹவ் ஆல் தி டைம் இன் தி வோர்ல்ட்!
எல்கே வெல்கம்!
ReplyDeleteகீ அக்கா, உங்களுக்கான மானிட்டர் பரிந்துரையை படிச்சீங்களா?
ReplyDeleteதிவாஜி கலக்குறீங்க. படிச்சுகிட்டே இருக்கேன். நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்க வேண்டி இருக்குன்னு இப்போதான் புரியுது. வாழ்க உங்கள் தொண்டு.
ReplyDeleteமர மண்டு
ashvinji