இந்த விசைப்பலகை இருக்கே அதுக்கு ஒரு பெயர் சொல்லறாங்க. இன்புட் டிவைஸ். அதாவது உள்ளீட்டு சாதனம். அதென்ன உள்ளீட்டு சாதனம்? நமக்கு என்ன வேணும்ன்னு ஒரு தகவலை கணினிக்குள்ளே அனுப்பறோம். அதனால உள்ளீட்டு சாதனம்.
வேற தகவல் உள்ளீட்டு சாதனமும் இருக்கு. உதாரணமா சொடுக்கி. ம்ம்ம்ம்ம்? புதுசா இருக்கா? இததான் ஆங்கிலத்துல மௌஸ் ன்னு சொல்வாங்க. அட நம்ம மௌஸான்னு கேக்கறீங்களா! இத ஸ்டான்போர்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டிலே செஞ்சப்ப அதுக்கு வயர் பின் பக்கம் இருந்ததாம் அதனால எலி மாதிரி இருக்கவே அப்படி பேர் வெச்சுட்டாங்க. முதல்ல டெலிபங்கன் கம்பனி இதை தன் கம்ப்யூட்டர் கூட வித்ததாம். டெலிபங்கன் பேரை இந்த தலை முறைக்கு தெரியுமோ என்னவோ? நம்ம தொ.கி தலைமுறைக்கு தெரியுமே!
அடுத்ததா வித்தது? ஜெராக்ஸ் கம்பனி...ஹிஹிஹிஹி..
இதான் ஆதிகாலத்து சொடுக்கி.
போதும் சமாசாரம் சொல்லு என்கறீங்களா? அதுவும் சரிதான். என்ன வயசாச்சா? அப்பப்ப அந்த நாள் .....ஞாபகம் .....நெஞ்சிலே .....வந்துடுது....
சொடுக்கியிலே சாதாரணமா ரேண்டு பட்டனும் ஒரு மேலே கீழே உருட்டி நகர்த்தக்கூடிய சக்கரமும் இருக்கும். சில சமயம் இந்த சக்கரம் பட்டனாவும் செயல்படும். பக்கவாட்டிலேயும் பக்கத்துக்கு ஒண்ணா ரெண்டு பட்டன் வைக்கறதும் உண்டு. அப்படி எல்லாம் இருந்தா அதுக்கு தனியா வேலை கொடுக்கணும். சாதாரணமா வேலை செய்யறது மேல் பட்டன்களும் சக்கரமும்தான்.
முன் கால சொடுக்கிகள்லே ஒரு பந்து மாதிரி இருக்கும். அதை நகத்தினா திரையிலே உள்ள சுட்டி (கர்சர்) நகரும். அவ்வளோதான். இந்த பந்தை உருட்டத்தான் அதை மௌஸ்பாட் மேலே தேய்க்கறது. கொஞ்ச நாள்லே இது மௌஸ்பேட் மேலெ இருக்கிற அழுக்கை எல்லாம் உருட்டி எடுத்துடும். அப்புறம் சொடுக்கி நாம் எதிர்பார்க்கிற மாதிரி வேலை செய்யாது. அதனால அடுத்ததா இன்ப்ரா ரெட் கதிர்களை பயன்படுத்தற ஆப்டிகல் மௌஸ் வந்தது. இது இப்ப ஸ்டாண்டர்ட் ஆயிடுத்து.
இங்க ஒரு tip கொடுக்கறேன். மௌஸ்பேட் கூடிய வரை வெள்ளை நிற அட்டை மாதிரி இருக்கிறதா பாத்துக்குங்க. (பனியன் வாங்கினா அது உள்ள இருக்கும்.) வழ வழன்னு க்ளாஸ் (gloss) பரப்பா இருக்க வேண்டாம். கலர் கலர் படம் இருக்கிறதாகவும் வேண்டாம்.
இந்த ஆப்டிகல் மௌஸ்ல ஒரு சிவப்பு எல்ஈடி இருக்கு. அது காட்டற வெளிச்சத்தில உள்ளே ஒரு ச்சின்ன காமெரா ஒரு செகண்டுக்கு ஆயிரம் படம் பிடிக்குது. முன்னே பிடிச்ச படத்துக்கும் இப்ப பிடிக்கிற படத்துக்கு இருக்கிற வித்தியாசங்களை ஆராய்ஞ்சு எந்தப்பக்கம் மௌஸ் நகர்ந்ததுன்னு கணக்கு போட்டு கணினிக்கு தகவல் அனுப்பிடும். யப்பாடா, இது என்ன சின்ன மௌஸ்ல பெரிய ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி இருக்கே ன்னு நினைக்கிறிங்களா? :-)) ஆமாம் அதுவேதான். அமெரிக்க டிபென்ஸ் கம்பெனிங்க நகருகிற இலக்கை (டார்கெட்டை) கூடவே தொடர உருவாக்கின தொழில் நுட்பம்தான் இது!
சொடுக்கியிலேயும் வயர்லெஸ் சொடுக்கி உண்டு. இன்ப்ரா ரெட், ரேடியோ அலை இவற்றை பயன்படுத்தி இவை வேலை செய்யும். கண்ணாடி மேலேயோ இல்லை அது மாதிரி பரப்பிலோ வேலை செய்யவும் துல்லியமான நகர்த்தலுக்கும் தோதா லேசர் சொடுக்கி வந்திருக்கு. இன்னும் கேம்ஸ் ஆட (இன்டெல் லே வேலை பாக்கிற தம்பி சொல்லறான், அவங்களை பொழைக்க வைக்கிறதே இந்த கேம்ஸ் ஆடறவங்கதானாம்!) விசேஷமான சொடுக்கி எல்லாம் உண்டு.
எப்படி கணினியோட இணைச்சு இருக்கு என்கிறதை பொறுத்து வயர்லெஸ் அல்லாதவைகளில யூஎஸ்பி சீரியல் பிஎஸ்/2 ன்னு வகைகள் உண்டு. கேட் (CAD) பயன் படுத்தறவங்களுக்கு 3 டி..... இன்னும் மேலே விஷயங்கள் இருந்தாலும் இப்ப இது போதும்.
இப்பவே ரொம்ப பெரிய பதிவா போச்சு! வரட்டா?
படங்கள் நன்றி: விக்கிபீடியா.
//இன்டெல் லே வேலை பாக்கிற தம்பி சொல்லறான், அவங்களை பொழைக்க வைக்கிறதே இந்த கேம்ஸ் ஆடறவங்கதானாம்!//
ReplyDeleteஉண்மை. பெரும்பாலும் அவர்களுக்குதான் அதிக சக்தி வாய்ந்த பிராசசர் வேண்டும்
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தெரியாத்தனமாக் கேட்டுட்டேன், அதுக்காக இப்படியா இவ்வளவு பெரிய பதிவைப் போடறது?? ம.ம.விலே ஏற வேண்டாம்??
ReplyDeleteமானிட்டர் பத்திக் குறிச்சுண்டாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் ஃபாலோ அப் ஆப்ஷனை நான் கேட்டாப்போல் கொடுத்ததுக்கு நன்னிங்கோ!