வேற என்னவெல்லாம் கணினியோட இருக்கு? மோடம் ஒண்ணு அவசியம் இருக்கும். ஒரு ஸ்கேனர், அச்சடிக்க எந்திரன்.. ச்சீ எந்திரம், இன்ன பிற...
ஸ்கேனர் தேவையானா வெச்சுக்கலாம், நாம செய்யற வேலையை பொறுத்து.
என்னை கேட்டா ப்ரின்டர் கூட வேண்டாம். தினசரி ஏதாவது ப்ரின்ட் எடுத்தாலே ஒழிய இது வேஸ்ட். சொன்னா கேக்கவா போறீங்க? சரி சரி, ப்ரின்டர் பத்தி பார்க்கலாம்.
என்னதான் கணினியில எல்லாத்தகவலும் வெச்சு இருந்தாலும் ஏதாவது டாக்குமெண்ட் அச்சடிக்க வேண்டி இருக்கும். கடிதமெல்லாம் இப்ப மின் அஞ்சல்ல அனுப்பறோம். லெட்டர்ஸ் டு எடிட்டர் கூட மின் அஞ்சல்ல அனுப்பலாம். பின்ன எதை அச்சடிக்கணும்?
சும்மா ஒரு பாக் அப் ஆ அடிக்கலாம். இல்லை நாம் எழுதின கவிதையை பத்து காப்பி அச்சடிச்சு "ஹிஹிஹி நேத்து ஒரு அருமையான கவிதை எழுதினேன் பாருங்க சார்!" ந்னுபாக்கிறவங்ககிட்டே எல்லாம் கொடுக்கலாம்.
அச்சுப்பொறியில பல வகை. முன்ன்ன்ன்னே டாட் மேட்ரிக்ஸ் ந்னு இருந்தது.
இப்ப கடைகளில பில் அச்சடிக்கத்தான் அது பயனாகுது. பக்கத்து பக்கத்திலே வெச்ச சின்ன சின்ன ஆணிகள் உள்ளே வெளியேன்னு இயங்கி பொட் பொட் ந்னு டைப்ரைட்டர் மாதிரியே அச்சடிக்கும்.
அப்புறமா இங்க்ஜெட். நெறைய துளைகள் வழியே இங்க் வெளியே வந்து சூடாக்கப்பட்டு வெடிச்சு சிதறி பேப்பர் மேலே பட்டு உலரும். இதை ஒழுங்கு படுத்தி எழுத்தா தெரியறா மாதிரி செய்து இருக்கறதுதான் ஆச்சரியம்!
இது எல்லாம் தினசரி அச்சடிச்சு கொண்டே இருக்கிற வரை சரிதான். நாலு நாள் ஊருக்கு போய் வந்தால் திரும்பி வந்து பாத்தா ஓட்டை எல்லாம் உலர்ந்த இங்கால அடைச்சு கொண்டு சரியா அச்சடிக்காது. அப்புறம் அதை க்ளீன் பண்ணனும்.
லேசர் ப்ரின்டர்ல இந்த தொல்லை எல்லாம் கிடையாது. ஆனா இன்னும் கலர் லேசர் விலை அதிகமாதான் இருக்கு. வெள்ளை கருப்பு மட்டுமேதான் ந்னா ஓக்கே!
தினசரி ஏதாவது ப்ரின்ட் எடுத்தாலே ஒழிய இது வேஸ்ட். சொன்னா கேக்கவா போறீங்க? சரி சரி, ப்ரின்டர் பத்தி பார்க்கலாம்.//
ReplyDeleteகொஞ்சம் சத்தமாச் சொல்லக் கூடாதோ?? சரி,சரி, பிரிண்டர் தான் வாங்கியாச்சு, ஸ்கானரும் சேர்த்து. இப்போத் தனியாப் ப்ரிண்டர் மட்டும் வேறே! :P:P:P
நிறைய இருக்குமோனு நினைச்சேன், நல்லவேளை!
ReplyDelete