Monday, November 22, 2010
ஸ்டார்ட் .... தி ம்யூசிக்!
வலது கீழ் கோடிலே இருக்கிறது ஸிஸ்டம் ட்ரே! ரொம்ப சரியா சொல்லப்போனா நாடிபிகேஷன் ஏரியா. கணினியிலே இயங்க தயாரா இருக்கிற சமாசாரம், மத்த அறிவிப்புகள், இணையத்திலே இருக்கோமா இல்லையான்னு தகவல், இப்போதைய நேரம் இப்படி பலதும் இங்கே இருக்கு. விவரங்கள் அப்புறம்.
கீழே இருக்கிற பட்டை டாஸ்க் பார். கணினியிலே பல வேலைகளும் நாம ஆரம்பிக்கலாம். எல்லாமே நேரடியா தெரியாதில்லையா. அப்ப இந்த இடத்திலே என்ன என்ன வேலைகள் நடக்குதுன்னு பாத்துக்கலாம்.
திரை முழுக்கவோ இல்லை கொஞ்சமாகவோ தெரியற படங்கள் எல்லாம் ஐகான் ன்னு சொல்லுவாங்க. சின்னங்கள். எந்த தேர்தலுக்கும், கட்சிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. ம்ம்ம் சொல்லப்போனா இதெல்லாம் குறுக்கு வழி விசைகள். இது மேலே சொடுக்கினா சம்பந்தப்பட்ட நிரல் வேலைதுவக்கம் செய்யும்.
இடது பக்கம் கீழே ஸ்டார்ட் ந்னு ஒரு பட்டன் இருக்கா? அதை சொடுக்குங்க! இப்ப நீங்க ஒரு கட்டளையை கணினிக்கு டைப் பண்ணி கொடுத்துட்டீங்க! ஆமா! முன்னேயே எழுதி வெச்ச ஒரு கட்டளையை தேர்ந்தெடுத்து அதுக்கு அனுப்பி இருக்கீங்க! ஒரு சின்ன சொடுக்கு மூலமா அதை சாதிச்சு இருக்கீங்க!
இப்ப பட்டையா ஒரு மெனு தெரியுதா? இதிலே தேவையானதை தேர்ந்தெடுத்து இன்னொரு சொடுக்கு சொடுக்கினா இன்னொரு கட்டளையை கணினிக்கு அனுப்பலாம்! ஹிஹிஹி பாருங்க! இன்னும் கொஞ்ச நேரத்திலே ரைட் அன்ட் லெஃப்ட் கணினிக்கு கட்டளையா அனுப்பி வேலை வாங்கப்போறோம்!
கீழேந்து மேலாக என்ன தெரியுதுன்னு பார்க்கலாமா?
turn off
log off
run
help
settings
documents
programs
படத்துக்கும் இப்ப சொன்னதுக்கும் சம்பந்தம் இல்லையேன்னு நினைக்காதீங்க. சிம்பிளா அமைச்சு இருந்தா நான் சொன்னபடிதான் வரும். உங்க கணினி கொஞ்சம் .... க்கும், கொஞ்சம் அட்வான்ஸ்ட் ந்னா இன்னும் கலர்புல்லா படத்தில இருக்காப்போலே வரும். அதில என்ன வரும்ன்னு படத்தை பாத்து தெரிஞ்சுக்குங்க.
கீழே முதல்ல தெரியறது turn off . அதாவது கணினி இயக்கத்தை நிறுத்த. இப்பதானே உள்ளே வந்தோம்? ஏன் வெளியே போகணும்? வேணும்ன்னா சும்மா ஒரு தரம் வெளியே போய் வருவோம்!
அடுத்து log off . அதாவது எக்ஸ்பி யை பலர் பயன்படுத்தற மாதிரி அமைக்கலாம். அவங்க அவங்களுக்கு பிடிச்சபடி தீம், மற்ற அமைப்பு எல்லாம் சேமிச்சு வெச்சு கொண்டு யார் உள்ளே வராங்கன்னு பாத்து அதுக்கு தகுந்தாப்பல உள்ளே விடும். அதனால ஒத்தர் போய் இன்னொருத்தர் வர தேவையானது இந்த லாக் ஆஃப். இங்கே எக்ஸ்பியின் ஒரு ஓட்டை இருக்கு. நம்ம அடைவுகளை எல்லாம் மத்தவங்களுக்கு காட்டாதேன்னு சொல்லி வெச்சா ஒழிய யார் வேணுமானாலும் கணினியிலே இருக்கற எல்லா அடைவுகளையும் கோப்புகளையும் பார்க்கலாம். அடைவு? கோப்பு? அதாங்க folder, file. சந்தடி சாக்கில கொஞ்சம் நல்ல தமிழும் கத்துக்கலாம். லீனக்ஸ்லே அப்படி இல்லை. அதனால பாதுகாப்பு அதிகம்.
Labels:
இயங்கு தளம்
Subscribe to:
Post Comments (Atom)
பெரிய பீத்தல் லினக்ஸ் பத்தி. அது போட்டா எல்லாத்தையுமே மாத்தணும்னு சொல்றாங்களே?? முதல்லே அந்தக் கஷ்டத்தை விளக்குங்க. அப்புறம் பார்க்கலாம், லினக்ஸ் ஒசத்தியா?? விண்டோஸ் ஒசத்தியானு!
ReplyDeleteஎன்னத்தை மாத்தனும்? ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லை. மோடம் வேணா பிரச்சினை இருக்கலாம்.விண்டோஸ்ல நீங்க செய்கிற வேலைகளிலே முக்காலே மூணு வீசம் செய்யலாம்.வைரஸ் பிரச்சினை இராது. அது ஒண்ணு போதாதா உங்களுக்கு? :P
ReplyDelete