Wednesday, November 24, 2010

நோட்பேட்

இன்னும் கணினியிலே இடங்களை பார்க்க வேண்டியிருக்கு. ஆனா நீங்க ஏதாவது வேலை செய்ய துடிக்கிறீங்கன்னு தெரியுது. ரைட், ஒரு சின்ன வேலை செய்யலாம்.
ஸ்டார்ட்>ப்ரோக்ராம்ஸ்> ஆக்ஸசரீஸ் >நோட்பேட்.
இப்படி எழுதினா முதல்லே ஸ்டார்ட் பட்டன் மேலே சொடுக்கி அப்புறம் வர மெனுவிலே  ப்ரோக்ராம்ஸ் மேலே சொடுக்கி அப்புறம் ஆக்ஸசரீஸ், அப்புறம் நோட்பேட் மேலே சொடுக்கணும்ன்னு பொருள். இனிமே இதே போலத்தான் எல்லாம் வரும் என்கிறதாலே இதை சரியா புரிஞ்சுப்போம். சந்தேகம் இருந்தா இப்பவே கேட்டுடுங்க.

நோட்பேட் எங்கே?
From notepad

நோட் பேட் மேலே சொடுக்கினதும் ஒரு வெள்ளை பக்கம் திறக்கும். இதுக்குள்ளே ஒரு செங்குத்தான கோடு விட்டு விட்டு தெரியும். அப்படி இருந்தா நாம் எழுத நினைக்கிறதை எழுதலாம். 'தொண்டுகிழங்களுக்கு கணினி' என்கிறது ஒரு சூப்பர் ப்ளாக்..... ஓ சாரி தமிழ்லே எழுத இன்னும் கத்துக்கொடுக்கலியே! பரவாயில்லை. ஆங்கிலத்துலேயே எழுதிடுங்க.
techforelders is a great blog!
எழுதியாச்சா? இந்த அற்புதமான செய்தியை, கண்டுபிடிப்பை பாதுகாக்க சேமிச்சு பத்திரப்படுத்துவோம்! அதை செய்ய இருக்கிற வழிகளிலே சுத்து வழியை பார்க்கலாம். அப்பத்தான் பல விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம்.
இந்த அற்புத செய்தியை எழுதினோமே அதுக்கு மேலே பொட்டியோட மேல் மார்ஜின் டைட்டில் பார். (Tiltle bar). அதுக்கு கீழே பட்டையா தெரியுது இல்லையா? இதில file, edit, format, view, help ந்னு எல்லாம் எழுதி இருக்கா? இதுக்கு மெனு பார் ந்னு பெயர்.
இதிலே file மேலே சொடுக்குங்க. மெதுவா சொடுக்கியை அசைச்சு பாருங்க. பொட்டியிலே இருக்கிற கோடும் அசையும். இந்த மெனு மேலே கொண்டு போனா அது ஒரு அம்புக்குறியா மாறிடும். அம்புக்குறியை சரியான இடத்திலே - file என்கிற எழுத்துக்கள் மேலே இருக்கும்போது க்ளிக்.... சொடுக்கியாச்சு. (ஆமாங்க, சொடுக்கறப்ப முன்னேயே எழுதி வெச்ச ஒரு கட்டளையை...சரி சரி, நினைவு இருக்கில்லே?) இப்ப புதுசா ஒரு மெனு அந்த வார்த்தையிலிருந்து கீழே இறங்குது. என்னவெல்லாம் இருக்குன்னு படத்திலே பாருங்க.

பைல் மெனு
From notepad

நமக்கு வேண்டியது சேவ். இப்ப சொடுக்கியால அம்புக்குறியை நகர்த்தி சேவ் ந்கிர எழுத்துக்கள் மேலே வெச்சு திருப்பியும் சொடுக்குங்க. இப்ப இன்னொரு பொட்டி திறக்கும். அது என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்ன்னு கேட்கும். இன்னும் எங்கே சேமிக்கலாம், என்ன மாதிரி பைல் ந்னு விவரம் கேட்கும். ம்ம்ம்ம் .... சரி இப்பவே தெரிஞ்சுக்கலாம். எந்த கணினியானாலும் பிரச்சினை இல்லாம ஒரு உரை- டெக்ஸ்ட்- கோப்பை படிக்க உகந்தது யூனிகோட். அதனால utf-6 அப்படின்னு தேர்ந்தெடுப்போம். விவரத்துக்கு படத்தை பாருங்க. இந்த கோப்புக்கு ஏதாவது பேர் கொடுக்கணுமே? அப்பதான் அதை திருப்பி கண்டு பிடிக்க முடியும்.
இப்போதைக்கு சும்மா test.txt  ன்னு டைப் அடிங்க. இல்லை greatest.txt ந்னும் அடிக்கலாம். எங்கே அடிக்கறது? படத்தை பாத்து தெரிஞ்சுக்குங்க.

டெஸ்க்டாப்பை சொடுக்கும் முன்னால எடுத்த படம். File name, Encoding கவனியுங்க!
From notepad
.-
கோப்பை எங்கே சேமிச்சு வெச்சிருக்குன்னு ஒரு தரம் நல்லா பாத்துக்குங்க. மேல்மேசையா (desktop) இல்லை மை டாகுமென்ட்ஸ் ஆ வேற எங்காவதான்னு, பாத்து வெச்சுகிட்டா அப்புறம் தடுமாறாம இருக்கலாம். இப்போதைக்கு உதாரணத்துக்கு மேல்மேசைன்னே வெச்சுக்கலாம். இப்ப இந்த நோட்பேடை மூடிடலாம். எப்படி? முன்னே மாதிரி பைல் மெனுவை கீழே இழுத்து கீஈஈஈஈஈழே இருக்கிற எக்ஸிட் ஐ தேர்ந்தெடுத்து சொடுக்கினா இந்த பொட்டி காணாமல் போயிடும்.

வெளியே போக.
From notepad

"அடடா! போயிடுச்சே! இன்னும் ஏதாவது எழுதலாம்ன்னு நினைச்சேனே" ன்னா ஒண்னும் கவலை வேண்டாம். அதை திருப்பியும் திறக்கலாம். எப்படி?

3 comments:

  1. இப்படி எழுதினா முதல்லே ஸ்டார்ட் பட்டன் மேலே சொடுக்கி அப்புறம் வர மெனுவிலே ப்ரோக்ராம்ஸ் மேலே சொடுக்கி அப்புறம் ஆக்ஸசரீஸ், அப்புறம் நோட்பேட் மேலே சொடுக்கணும்ன்னு பொருள். //

    hihihi, இவ்வளவு கஷ்டப் படம்மாட்டோமே, நேரே நோட்பேட்னு ரன் னிலே போய்க் கொடுத்துடுவோம். டண்டடண்டடய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க் நோட்பேட் கணினியிலே, கையிலே தட்டச்சு, டொய்ங்க்க்க்க்க்க்க்க்க்க் முடிச்சு சேவ் பண்ணியாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

    ReplyDelete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!